மானத்தமிழர் நிலத்தில் மராட்டியனுக்கு என்ன வேலை - சீமான் ஆவேசம்.!
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அரசிய லில் பிரவேசிக்கப் போவதாகவும், புதி தாக ஓர் அரசியல் கட்சியினை துவ க்கி வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திலுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடப்போவ தாக கடந்த ஆண்டு நடைபெற்ற தனது ரசிகர்கள் சந்திப்பு நிகழ்வில் அறிவித்தார். ரஜினியின் அறிவிப்பினை தொடர்ந்து அவரது அரசியல் வரு கையை ஆதரித்தும், எதிர்த்தும் அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்தினை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை ஒருபோதும் தமிழக அரசியல் தளத்தில் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவருக்கு எதிரான மூர்க்கமான அரசியல் செய ற்பாடுகளை நாங்கள் முன்னெடுப்போமென அறிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட சீமான், "மானத்தமிழர் நிலத்தில் மராட்டியனான ரஜினிக்கு என்ன வேலை, பிழைப்புக்காக வந்தவர்களிடத்தில் எங்களை ஆளும் தகுதி யினை ஒப்படைப்பது என்பது எம் இனத்திற்கு செய்கிற இழிவு.
ஆகவே, ரஜினியை ஒருபோதும் தமிழக அரசியல் தளத்தில் நாங்கள் வெல்ல அனுமதிக்கப்போவதில்லை" என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.