Breaking News

கன­வு­லகில் மஹிந்த மிதப்பதாக - ரணில்.!

கடன் சுமை­யுடன் கூடிய பொரு­ளா­தா­ரத்தை முகா­மைத்­துவம் செய்ய முடி­யா மல் தேசிய அர­சாங்கம் கவிழ்ந்து விடுமென முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ கனவு கண்ட வண்­ண­முள்ளார்.

அக் கன­வை நன­வாக்க முடி­ய­வி ல்லை. எவ்­வா­றா­யினும் 2020 ஆம் ஆண்டு வரைக்கும் நாம் ஆட்­சியில் இருப்போம் என்­ப­தனை நான் நம்­பிக்­கை­யுடன் கூறு­கின்றேன் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்தார். குரு­நாகல், நிக்க­வ­ரட்­டிய தொகு­தியில் நேற்று நடை­பெற்ற ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிர­சார கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்வாறு தெரி­வித்தார். 

அங்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் உரை­யாற்­று­கையில், குரு­நா­க லில் அதி­க­ள­வி­லான ஆடை தொழிற்­சா­லை­களை நிர்­மா­ணித்து முன்னாள் ஜனா­தி­பதி ஆர்.பிரே­ம­தாஸ பாரிய அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டு த்தார். அதன்­பின்னர் இந்த பிர­தே­சத்­திற்கு எந்­த­வொரு அபி­வி­ருத்­தியும் வந்து சேர­வில்லை. 

யுத்தம் நிறைவு செய்யும் வரை பொறு­மை­யாக இருக்­கு­மாறு தெரிவித்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ யுத்தம் நிறைவு செய்த பின்னர் எந்­த­வொரு அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்­க­வில்லை. முன்­னைய ஆட்­சியின் போது போதி­ய­ளவு வரு­மானம் இல்­லாத கார­ணத்­தினால் கடன் பெற்­றனர். 

அதன்­பின்னர் கடன் சுமை அதி­க­ரித்­தது. கடன் தொகையை செலுத்தும் அள­வி ற்கு நாட்டின் வரு­மானம் போதி­ய­தாக இருக்­க­வில்லை. இதனால் நாட்டின் பொரு­ளா­தாரம் அதள பாதா­ளத்­திற்கு தள்­ளப்­பட்­டது. இதன்­படி பொரு­ளா­தா­ர த்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது என்­ப­தனை அறிந்த முன்னாள் ஜனா­தி­பதி மஹி ந்த ராஜ­ப­க் ஷ இரண்டு வரு­டத்தில் தேர்­தலை நடத்­தினார். 

அதன்­பின் நாம் ஆட்­சியை பொறுப்­பேற்றோம். எனினும் கடன் சுமை­யுடன் கூடிய பொரு­ளா­தா­ரத்தை முகா­மைத்­துவம் செய்ய முடி­யாமல் நல்­லாட்சி அர ­சாங்கம் திணறும் என்­ப­தனை அறிந்து கொண்டு மூன்று வரு­டத்தில் இந்த அர­சாங்­கத்தை கவிழ்க்க கனவு கண்டார். 

தற்­போது கனவு கண்­ட­ வண்­ண­முள்ளார். இதன்­பி­ர­கா­ரமே ஆட்­சியை கவி ழ்ப்பேன் என சூளு­ரைத்த வண்­ண­முள்ளார். என்­றாலும் அவ­ரது கன­வையும் தாண்டி நெருக்­க­டி­மிக்க பொரு­ளா­தா­ரத்தை சாத­க­மான நிலை­மைக்கு தற்­போது கொண்டு வந்­துள்ளோம். 

கடன் சுமையை குறைத்து வரு­கின்றோம். இந்­நி­லையில் 2020 ஆம் ஆண்டு வரைக்கும் நாம் ஆட்­சியில் இருப்போம் என்­ப­தனை நம்­பிக்­கை­யுடன் கூறு­கின்றேன். தற்­போது நாம் பாரா­ளு­மன்­றத்தை பலப்­ப­டுத்­தி­யுள்ளோம். 2016 ஆம் ஆண்­ட­ளவில் வரு­மா­னத்தை தேடும் பொரு­ளா­தா­ரத்தை எம்மால் தோற்­று­விக்க முடிந்­தது. 

அத்­துடன் கப்பல் வராத துறை­மு­கத்தை 130 கோடி டொலர் கடன் பெற்று நிர்­மா­ணித்­தனர். எனினும் கப்பல் வரும் துறை­மு­க­மாக அதனை மாற்­றினோம். இதன்­படி சீன நிறு­வ­னத்­திற்கு குத்­த­கைக்கு வழங்­கி­யதின் ஊடாக பெற்ற கட னில் 110 கோடி டொலரை எம்மால் செலுத்த முடிந்­தது. அத்­துடன் நாட­ளா­விய ரீதியில் கைத்­தொழில் வல­யங்­களை உரு­வாக்­க­வுள்ளோம். 

இதன்­படி அம்­பாந்­தோட்­டையில் மாத்­தி­ரம 5 வல­யங்­களை உரு­வாக்­குவோம். குரு­நா­க­லிலும் கைத்­தொழில் வல­யங்­களை உரு­வாக்­குவோம். மத்­திய அதி­வேக பாதையை துரி­த­மாக நிர்­மா­ணிப்போம். இதன் ஊடாக கண்டி முதல் அம்­பாந்­தோட்டை வரைக்கும் அதி­வேக வீதி கட்­ட­மைப்பை உரு­வாக்­குவோம். இதனை நாம் 2002 ஆம் ஆண்டு திட்­ட­மிட்டோம். 

எனினும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சியின் போது வேலைத்­திட்­டத்தை ஆரம்­பித்­தாலும் எவ்வித நிதியும் ஒதுக்கீடும் செய்ய வில்லை. முன்னைய ஆட்சியின் போது உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக எந்தவித அபிவிருத்தியும் முன்னெடுக்கவில்லை. 

அந்த ஆட்சியில் எவ்வித பிரயோசனமும் இருக்கவில்லை. ஆகவே கிராம த்தின் அபிவிருத்தியை முன்னெடுக்க கிராமத்தின் தனி அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுத்தர வேண்டுமெனத் தெரிவித்தார்.