வடக்கு முதல்வரை பிரித்தானிய நாடாளுமன்றக்குழு சந்திப்பதைத் தடுத்தார் - சுமந்திரன்!

உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை பயணம் மேற்கொண்ட சர்வ கட்சி களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு பயணமாகவுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில், யாழ். கோட்டை, யாழ். பொதுநூலகம் போன்ற வற்றை சென்று பார்வையிடவுள்ள அக்குழுவினர், வடக்கு ஆளுநர் ரெஜி னோல்ட் கூரே, இராணுவத்தின் யாழ். தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி ஆகியோரையும் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தெரிவிக்கப்ப டுகின்றது.
ஆனால் இக் குழுவினர் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்திக்க மாட்டார்கள் எனத் தெரிகின்றது. அவரை சந்திப்பது தொடர்பிலும் அவர்கள் திட்டமிடவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக கொழும்பில் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை சந்தித்துப் பேசியிருந்தனர். அவரின் அழைப்பின் பேரிலேயே இன்று அவர்கள் யாழ்ப்பாணம் பயணமாகின்றனர்.
குறித்த சந்திப்பின் போதே விக்னேஸ்வரனை சந்திப்பதைத் தடுப்பதற்கான முயற்சியை சுமந்திரன் மேற்கொண்டதாக சுமந்திரனுக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
ஏற்கனவே மலேசியப் பிரதமர் இலங்கைக்கான பயணத்தினை மேற்கொண்ட போதும் வடக்கு முதல்வரை சந்திக்கவிடாது தடுக்கும் முயற்சியில் சுமந்திரன் ஈடுபட்டிருந்த போதிலும் அவ் முயற்சி வெற்றியளிக்கவில்லையென்பது வெளியாகியுள்ளது.