Breaking News

பிரச்சினை என்றால் ஆரியாவோ சூரியாவோ தீர்ப்பதில்லை - மனோ !

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் கொழும்பு மாவட்­டத்தில் வாழும் தமிழ் மக்கள் தமது பலத்தை காண்­பிக்­க­வேண்டும். தமிழ் மக்­களின் பலத்தை காண்­பிக்­க­வேண்டும் என்­ப­தற்­கா­கவே இந்தத் தேர்­தலில் நாம் தனித்து போட்­டி­யி­டு­கின்றோம்.

நாம் பல­மாக இருந்­தால்தான் பெரும்­பான்மை கட்­சி­க­ளி­ட­மி­ருந்து எத­னை யும் பெற்­றுக்­கொள்ள முடியும் என்று ஒரு­மித்த முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வரும் தேசிய சக­வாழ்வு மற்றும் கலந்­து­ரை­யாடல் அமைச்­ச­ரு ­மான மனோ கணேசன் வலி­யு­றுத்­தி னார். கொழும்பு மாவட்­டத்தில் தமி­ழ ர்­களின் தலை­ந­க­ராக கொச்­சிக்­க­டையே திகழ்­கின்­றது. கொச்­சிக்­க­டை­யா­னது வீரம் செறிந்­த­வர்கள் வாழும் பகு­தி­யாகும். கொச்­சிக்­க­டையை உள்­ள­டக்­கிய வட­கொ­ழும்­பி­லேயே தமிழ் மக்கள் பெரு­ம­ளவில் வாழ்­கின்­றனர். 

எனவே கொழும்பு வடக்கில் வாழும் தமி­ழர்­களும் ஏனைய பகு­தி­களில் வாழும் தமிழ் மக்­களும் எமது தனித்­து­வ­மான பலத்தை காண்­பிக்கும் வகையில் வாக்­க­ளிக்­க­வேண்டும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார். 

ஊட­க­வி­ய­லாளர் மணி டன்ஸ்­டனின் ''இன்னும் பெயர் வைக்­கல்ல'' எனும் நூல் வெளி­யீடு நேற்று முன்­தினம் மாலை கொழும்பு டி. ஆர். விஜ­ய­வர்த்­தன மாவத்­தையில் அமைந்­துள்ள தபால் திணைக்­கள கேட்போர் கூடத்தில் இடம்­பெற்­றது. 

இந் நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார். இங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில் கூறி­ய­தா­வது:- 

கொழும்பில் தமி­ழர்­களின் தலை­ந­க­ர­மாக கொச்­சிக்­க­டையே திகழ்­கின்­றது. கொச்­சிக்­க­டை­யா­னது என்னை நம்பும் மக்கள் வாழும் பகு­தி­யாகும். அது எனது கோட்­டை­யாகும். கொச்­சிக்­கடை தமிழ் வீரம் செறிந்த பகு­தி­யாக திகழ்­கின்­றது. எனக்கும் தமிழ் செருக்கு காணப்­ப­டு­கின்­றது. 

 நான் எட்­டி­யாந்­தோட்­டையில் பிறந்து களனி கங்­கையின் தண்­ணீ­ரையும் கண்­டியில் வளர்ந்து மகா­வலி கங்­கையின் தண்­ணீ­ரையும் குடித்து வளர்ந்­தவன். எனக்கும் இத்­த­கைய தமிழ் வீரம் உள்­ளது. உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் கொழும்பு மாவட்­டத்தில் நாம் தனித்து போட்­டி­யி­டு­கின்றோம். 

ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் இணைந்தும் சில பகு­தி­களில் தனித்தும் நாம் மலை­ய­கத்­திலும் தென்­ப­கு­தி­யிலும் போட்­டி­யி­டு­கின்றோம். கொழும்பு மாவட்­டத்தில் நாம் எமது தனித்­து­வ­மான பலத்தை காண்­பிக்­க­வேண்டும். பெரும்­பான்மை கட்­சிகள் நாம் கேட்­ப­தை­யெல்லாம் தட்டில் வைத்து தரப்­போ­வ­தில்லை. 

எமது பலத்தை காண்­பித்­தால்தான் அதற்­கான சூழலை உரு­வாக்க முடியும். கொழும்பு மாந­க­ர­சபைத் தேர்­தலில் ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் எனது நண்­ப­ரு­மான ரவூப் ஹக்கீம், அகில மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் நண்­ப­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் ஆகியோர் ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யினால் ஏமாற்­றப்­பட்­டுள்­ளனர். 

இறு­தி ­நே­ரத்தில் அவர்­க­ளது வேட்­பா­ளர்­க­ளது பெயர்கள் பட்­டி­யலில் இருந்து வெட்­டப்­பட்டு வேறு­பெ­யர்கள் சேர்க்­கப்­பட்­டுள்­ளன. முன்னாள் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க பெயர்­களை வெட்­டு­வதில் கெட்­டிக்­காரர். அவர்தான் இந்த விட­யத்­தினை மேற்­கொண்­டுள்ளார். 

இதே­போன்றே ரவி கரு­ணா­நா­யக்க எங்­க­ளது விட­யத்­திலும் செயற்­பட எத்­த­னித்தார். அவர் சூரர் என்றால் நான் அத­னை­விட சூர­னாவேன். இத­னால்தான் நாம் தனித்து போட்­டி­யிடும் நிலை உரு­வா­னது. இவ்­வாறு தனித்துப் போட்­டி­யிட்டு நாம் எமது பலத்தை காண்­பிக்­க­வேண்டும். 

தற்­போது கொச்­சிக்­கடை உட்­பட கொழும்பில் சன் ரீ.வி. , விஜய் ரீ.வி, உட்­பட இந்­திய தொலைக்­காட்­சி­களை தமிழ் மக்கள் பெரிதும் பார்­வை­யிட்டு வரு­கின்­றனர். இவ்­வாறு படங்­க­ளையும் நாடகத் தொடர்­க­ளையும் பார்க்­காது எதிர்­வரும் 10ஆம் திகதி அனை­வரும் வாக்­க­ளிக்கச் செல்­ல­வேண்டும். 

படத்தில் வரும் இந்­திய நடி­கர்­க­ளான விஜயோ, அல்­லது சூரி­யாவோ, ஆரி­யாவோ உங்­க­ளுக்கு இங்கு பிரச்­சினை வரும்­போது வரப்­போ­வ­தில்லை. ஆனால் மனோ கணேசன் மட்­டுமே உங்­க­ளது வீடு­க­ளுக்கு உடனே வருவான். எனவே இதனை உணர்ந்து கொச்­சிக்­கடை மக்கள் உட்­பட கொழும்பு வடக்கு மக்கள் உட்­பட கொழும்பு மாவட்ட தமிழ் மக்கள் உங்­க­ளது வாக்­கு­களை எம க்கு அளிக்­க­வேண்டும். 

நாம் தனித்­து­வ­மான பலத்­துடன் இருந்தால் தான் நல்­லது. சூரி­யாவோ, ஆரி­யாவோ உங்களுக்கு இங்கு பிரச்சினை வரும்போது வரப்போவதில்லை. ஆனால் மனோ கணேசன் மட்டுமே உங்களது வீடுகளுக்கு உடனே வருவான். எனவே இதனை உணர்ந்து கொச்சிக்கடை மக்கள் உட்பட கொழும்பு வடக்கு மக்கள் உட்பட கொழும்பு மாவட்ட தமிழ் மக்கள் உங்களது வாக்குகளை எம க்கு அளிக்க வேண்டும். நாம் தனித்துவமான பலத்துடன் இருந்தால் தான் எதனையும் சாதிக்க முடியும்.