சபாநாயகரிடம் பிரதமர் வேண்டுகோள்.!
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாப ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் பாராளுமன்ற விவாதம் ஒன்று நடத்தப்பட வேண்டு மென சபாநாயகரிடம் கோரியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரி வித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியில் நடை பெற்ற பிணைமுறி மோசடி தொட ர்பில் ஜனாதிபதியினால் நியமிக்கப்ப ட்ட ஆணைக்கழுவின் விசாரணை அறிக்கை அண்மையில் ஜனாதிபதி யிடம் வழங்கப்பட்டது. அவ் அறிக்கை யில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்க ளை உள்ளடக்கி அண்மையில் விஷேட உரையொன்றை ஜனாதிபதி நிகழ்த்தியிருந்தார். இது தொடர்பில் அர சாங்கத்திற்குள்ளும் வெளியிலும் பல்வேறு வாதப்பிரதி வாதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் இது தொடர்பில் பாராளுமன்றில் விவாதம் நட த்த வேண்டுமென பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.