Breaking News

சொத்து விவ­ரங்­களை 20க்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் - மஹிந்த தேசப்­பி­ரிய

தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்கள் தமது சொத்து விவ­ரங்­களை இம்­மாதம் 20 ஆம் திக­திக்கு முன்னர் ஒப்­ப­டைக்க வேண்டும். சொத்து விவ­ரங்­களை ஒப்­ப­டைக்­கா­த­வர்கள் தொடர்பில் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படுமென தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்தார்.

தேர்தல் குறித்த காரி­யா­ல­யங்கள், பதா­கைகள், மற்றும் சுவ­ரொட்­டிகள் என்­பன இம்­மாதம் 31 ஆம் திக­தி­யுடன் அகற்­றப்­பட வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். தேர்­தல்கள் செய­ல­க த்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யா ளர் சந்­திப்பின் போதே தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  

மேலும் தெரிவிக்கையில்........

தேர்தல் நகர்­வுகள் குறித்து மிகவும் நெருக்­க­டி­யான மற்றும் பர­ப­ரப்­பான செயற்­பா­டுகள் இடம்­பெற்று வரு­கின்­றன. இவற்றில் தேர்தல் பிரச்­சார நட­வ­டிக்­கை­களில் தமக்­கான வாக்கு கோரி வீடு­க­ளுக்கு செல்லும் குழுக்கள் தொட ர்பில் பிரச்­சி­னைகள் எழுந்­துள்­ளன. 

இலங்­கையின் தேர்தல் சட்­டத்தின் பிர­காரம் 12 பேருக்கு மேற்­பட்ட குழு­வொன்று பய­ணித்தால் அது பேர­ணி­யா­கவே கரு­தப்­படும். இதன்­படி 12 பேரை விட அதி­கா­மா­ன­வர்கள் சென்றால் அது தேர்­த­லுக்­கான பேர­ணி­யாக கரு­தப்­படும். ஆகவே ஒரு கட்­சியின் சார்­பிலோ அல்­லது சுயேச்­சைக்­கு­ழு­வா­கவோ 10 பேருக்கு மேல் வாக்கு கோரி வீடு­க­ளுக்கு செல்ல முடி­யாது. 

இது ஆரம்­பத்தில் சகல கட்­சிகள் மற்றும் சுயேச்­சைக்­கு­ழுக்­க­ளுக்கு அறி­விக்கப் பட்­டுள்­ளது. அதையும் மீறி அதி­க­ள­வி­லான நபர்கள் சென்றால் சம்­பந்­தப்­பட்ட குழு சட்­ட­வி­ரோத குழு­வாக கரு­தப்­பட்டு அவர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்­கை­யெ­டுக்­கப்­படும். 

மேலும் வீடு­க­ளுக்கு சென்று வேட்­பா­ளர்கள் வாக்­கு­று­தி­களை வழங்­கவும் அனு­மதி இல்லை. தேர்தல் வாக்­கு­று­தி­களை வழங்­கு­வதும் ஒரு­வ­கையில் இலஞ்­ச­மே­யாகும். இதன்­படி வீடு­க­ளுக்கு செல்லும் வேட்­பா­ளர்கள் தமது கட்­சி­யி­னதோ அல்­லது குழு­வி­னதோ கொள்கை பிர­க­ட­னத்தை மாத்­தி­ரமே மக்­க­ளுக்கு வழங்க முடியும். 

அதனை மீறி தேர்தல் வாக்­கு­று­தி­களை வழங்­கினால் அது குறித்தும் தேர்தல் சட்­டத்தின் பிர­காரம் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். மேலும் தேர்தல் சட்­டத்தின் பிர­காரம் சுவ­ரொட்­டி­க­ளுக்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இருப்­பினும் விசேட கூட்­டங்கள், தேசிய மாநாடு போன்ற விட­யங்­களின் போது சுவ­ரொட்­டி­களை ஒட்ட முடியும். 

இதன்­போது கட்­சியின் பெயர் கூட்டம் நடக்கும் இடம், நேரம், நாள் போன்ற விட­யங்­களை தவிர வேறு எந்த விட­யத்­தையோ சின்­னங்­க­ளையோ பயன்­ப­டுத்த முடி­யாது. அத்­துடன் தலைவர், முன்னாள் தலைவர் என யாரு­டைய புகைப்­ப­டங்­களும் பயன்­ப­டுத்­தப்­படக் கூடாது. 

எனினும் இவ்­வா­றான சில சம்­ப­வங்கள் பதி­யப்­பட்டு அது குறித்த தக­வல்கள் எமக்குக் கிடைத்­துள்­ளன. வேட்­பா­ளர்­க­ளுக்கு தேர்தல் அலு­வ­ல­கங்­களில் பதாகை மற்றும் சுவ­ரொட்­டி­களை ஒட்ட அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளமை அவர்­களின் உரிமை கிடை­யாது. 

தேர்தல் சட்­டத்­தின்­படி அவ்­வாறு செய்ய முடி­யாது. இருப்­பினும் கட்­சி­களின் கோரிக்­கை­க­ளுக்­க­மைய வேட்­பா­ளர்­க­ளுக்கு வரப்­பி­ர­சா­த­மாக அதற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றாக அலு­வ­ல­கங்­களில் காணப்­படும் பதா­கைகள் மற்றும் சுவ­ரொட்­டி­களை ஜன­வரி 31ஆம் திக­தி­யுடன் அகற்­றி­விட வேண்டும். 

அதேபோல் கட்­சிக்­கென அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள தேர்தல் அலு­வ­ல­கங்­களை 7ஆம் திக­தி­யுடன் அகற்­றி­யாக வேண்டும். மேலும் கட்­சியின் வேட்­பா­ளர்கள் தமது சொத்து விப­ரங்­களை எதிர்­வரும் 20ஆம் திக­திக்குள் சமர்ப்­பிக்க வேண்டும். இப்­போது வரையில் ஒரு கட்சி மாத்­தி­ரமே தமது சொத்து விப­ரங்­களை ஒப்­ப­டைத்­துள்­ளது. 

ஏனைய கட்­சி­களும் 20 ஆம் திக­திக்கு முன்னர் ஒப்­ப­டைக்க வேண்டும். இல்­லையேல் குறித்த கட்­சிகள் மீதான சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். மேலும் வேட்­பா­ளர்­க­ளுக்கு 22ஆம் திக­திக்கு பின்னர் அலு­வ­ல­கங்­களை நடத்திச் செல்ல அனு­ம­திக்க மாட்டோம். 

அதனை மீறி இருக்கும் அலு­வ­ல­கங்­களை பொலி­ஸாரை கொண்டு அகற்­றுவோம். மேலும் வடக்கு, கிழக்கு, தெற்கு என சகல பிர­தே­சங்­க­ளிலும் சமய வழி­பாட்டு இடங்­களில் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கைகள் இடம்­பெ­று­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. 

அது தொடர்­பாக முறைப்­பா­டு­களும் கிடைத்­துள்­ளன. கிழக்கில் சமய தளங்­களில் அர­சியல் பேச்­சுக்கள் நடத்­தப்­ப­டு­வ­துடன் சிலர் தமது தேர்தல் கொள்கை பிர­க­ட­னங்­களைக் கூட அங்­கி­ருந்து தயா­ரித்­துள்­ள­தா­கவும் முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ளன. வழிப்­பாட்டு இடங்­களில் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள முடி­யாது. 

இதனை மீறி நடந்­துக்­கொண்டால் சம்­பந்­தப்­பட்ட வேட்­பா­ளர்­க­ளுக்கும் வழிப்­பாட்டு இடங்­க­ளுக்கு பொறுப்­பா­ன­வர்­க­ளுக்கும் எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். சமயம் என்­பது வேறு அர­சியல் என்­பது வேறு, இரண்­டையும் தொடர்­பு­ப­டுத்த முடி­யாது. 

அதேபோல் சம­யத்­துடன் கூடிய வகையில் அர­சி­யலை திணித்து மக்­களை தவ­றாக வழி­ந­டத்தும் செயற்­பா­டாக இவை அடை­யா­ள­ப­டுத்­தப்­படும். எனவே சகல கட்­சி­களும் இதனை கருத்தில் கொள்ள வேண்டும். சமூக வலைத்­த­ளங்­களில் நடக்கும் பிர­சா­ரங்கள் தொடர்­பாக அவ­தானம் செலுத்­தப்­பட்டு வரு­கின்­றது. 

முகப்­புத்­தகம் உள்­ளிட்ட சமூக வலைத்­த­ளங்­க­ளி­னூ­டாக பிர­சார நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது தொடர்­பாக அவ­தானம் செலுத்­தி­யுள்ளோம். இது தொடர்­பாக சட்­டமா அதி­ப­ருடன் கலந்­து­ரை­யாடி தீர்­மானம் மேற்­கொள்வோம். 

அதற்கு தடை­வி­திக்க வேண்­டு­மென்றால் விசேட சட்­டங்­களை கொண்டு வர வேண்டும். இதனால் அந்த விடயம் தொடர்­பாக ஆராய்ந்து வரு­கின்றோம். எனினும் இவை சற்று சிர­ம­மான காரி­ய­மாகும். 

எவ்­வாறு இருப்­பினும் துரி­த­மான நட­வ­டிக்­கைகள் அவ­சி­ய­மாகும். 

கேள்வி:- தேர்தல் கண்­கா­ணிப்பு நகர்­வு­களில் சர்­வ­தேச அமைப்­பு­களின் ஒத்­து­ழைப்­புகள் உள்­ள­னவா? 

பதில்:- தேர்­தலின் போது சர்­வ­தேச அமைப்­பு­களின் கண்­கா­ணிப்­புகள் எதற்கும் இட­மில்லை, இம்­முறை தேர்­தலின் போது உள்­நாட்டு கண்­கா­ணிப்பு அமைப்­புகள் மட்­டுமே கட­மை­களில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. பெபரல், கபே, உள்­ளிட்ட முக்­கி­ய­மான சில சிவில் அமைப்­புகள் மூல­மா­கவே கண்­கா­ணிக்­கப்­ப­டு­கின்­றது. 

கேள்வி:- தற்­போது புதி­தாக உரு­வாக்­கப்­பட்­டுள்ள தேர்தல் தொகுதிகளின் சில வற்றில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு இருக்கையில் ஒரு நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமாக அமையுமா? 

பதில்:- சாத்தியம் உள்ளதாக நாங்கள் கருதுகின்றோம், நீதிமன்ற தீர்ப்புகள் எமக்கு சாதகமாக அமையும் என நம்புகின்றேன். அவ்வாறு இல்லாது குழ ப்பங்கள் ஏற்படுகின்றன என நீதிமன்றம் கூறும் பட்சத்தில் அவை தவிர்ந்து ஏனைய பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படும். 

எவ்வாறு இரு ப்பினும் தேர்தல் நடத்தப்படுவதில் எந்த சந்தேகமும் இல்லை, ஒரே நேரத்தில் சகல மன்றங்களுக்குமான தேர்தலாக அமையுமென நாம் நம்புகின்றோம்.