இலங்கை போக்குவரத்து சபையின் பணிப்பகிஷ்கரிப்புக்கு தீர்வு என்றார் - முதலமைச்சர்!
இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய இணைந்த தொழிற் சங்க த்தினர் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு தீர்வு கிடைக்க ப்பெற்றுள்ளது.
வவுனியா புதிய பஸ் நிலையத்தில் எதிர்வரும் மாதத்தில் இருந்து இணை ந்த நேர அட்டவணையின் அடிப்படை யில் சீரான உள்ளூர் மற்றும் வெளி யூர் பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்படு மென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ள தாக அவரது செயலாளர் விஜயலக்ஷமி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடபிராந்திய இ.போ.ச ஊழியர்கள் நடத்தி வந்த பணி பகிஸ்கரிப்பு போராட்ட த்தினை அடுத்து கொழும்பிலிருந்து வந்த இ.போ.ச. தலைமை அலுவலக த்தின் அதிகாரிகள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடியபோது தனியார் சிற்றூர்தி சங்க த்தினரும் கலந்து சிறப்பித்தனர்.
குறித்த கலந்துரையாடலை முடித்துக்கொண்டி வெளியேறிய முதலமைச்சர் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் தான் சார்ந்த கருத்து க்களை தனது செயலாளர் தெரிவிப்பார் எனக் கூறி முதலமைச்சர் அங்கிருந்து புறப்பட்டார்.
அதனை தொடர்ந்து முதலமைச்சர் சார்பில் அவரின் செயலாளர் விஜயல க்ஷமி கேதீஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்ட வாறு தெரிவித்தார்.
செயலாளர் மேலும் தெரிவிக்கையில்...
வவுனியாவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பஸ் நிலையத்தை இயங்க வைப்பது தொடர்பில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் இ.போ.ச தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த அதிகாரிகள் கலந்து சிறப்பித்துள்ளனர்.
இவ்வேளை முக்கியமாக 3 விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. ஏற்கனவே புதிய பஸ் நிலையத்தில் இ.போ.ச மற்றும் தனியார் சிற்றூர்தியினர் இணைந்த நேர அட்டவணைக்கு ஏற்ப ஒரே வரிசையில் நின்று சேவையாற்றுவதெனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் இன்று (நேற்று) நடைபெற்ற கலந்துரையாடலின் போது அத் தீர்மானத்தில் சிறிது தளர்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தூர சேவைக்கான இணைந்த நேர அட்டவணை தயாரிக்கும் வரையில் இரு பகுதியினருக்குமான உள்ளூர் சேவைகள் இணைந்த நேர அட்டவணையின் படி தனித்தனியாக நடைபெற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இத்தீர்மானம் இரு பகுதியினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இத் தீர்மா னத்தின் அடிப்படையில் இன்று (நேற்று) மாலை 2 மணியிலிருந்து வவுனியா புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ் சேவைகள் ஆரம்பிக்க ஏற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று ஏனைய மாகாணத்தில் இருந்து வடக்கு மாகாணத்திற்கு வரும் பஸ்கள் வவுனியா பஸ் நிலையத்திற்குள் சென்று பயணிகளை இறக்குதல், ஏற்றுதல் போன்ற சேவையில் ஈடுபடுவது தொடர்பில் இணக்கம் எட்டப்பட வில்லை.
இதனால் வெளி மாகாணங்களில் இருந்து வரும் பஸ்கள் பஸ் நிலையத்தி ற்குள் வராமல் வெளியில் நின்று பயணிகளை ஏற்றுவது, இறக்குவது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுமெனத் தீர்மானிக்கப்பட்டது. இவ் விடயத்திலும் இணக்கம் காணப்பட்டது.
மேலும் பஸ் நிலையத்திற்கு வெளியே பயணிகளின் நன்மை உடனடியாக இல்லா விட்டாலும் கருதி பஸ் தரிப்பிடம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இம் முடிவுகள் அனைத்தும் தற்காலிகமாகவே எடுக்கப்பட்டுள்ளது. வெளி மாகாண சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கான இணைந்த நேர அட்டவணை தயாரிக்கும் வரையே இவ் முடிவுகள் நடமுறையில் இருக்கும்.
நாளை மறு தினம் 5 ஆம் திகதி தூர பஸ் சேவைக்கான நேர அட்டவணை தயாரிப்பது தொடர்பில் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து இரு தரப்பினர்களும் தமது சங்கங்களில் கலந்துரையாடி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இறுதி முடிவு எடுக்கப்பட்டு புதிய பஸ் நிலையத்தில் இருந்து சீரான பயணிகள் சேவை தொடருமெனவும் இதே வேளை பஸ் நிலையம் இரு தரப்பினர்களின் பாவனைக்கு பகிர்ந்து வழங்கப்ப ட்டாலும், எல்லைகள் பிரிக்கப்பட்டு தடுப்புச் சுவர்கள் அமைக்கப்படாதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.