புங்குடுதீவில் கடற்படையின் கவச வாகனம் பாடசாலைச் சிறுமியின் உயிரைப் பறித்தது!
புங்குடுதீவு மகா வித்தியாலய த்தினை அண்டிய பகுதி கட ற்படையி னரின் கவச வாகனம் (பவள்) அதி வேகமாக வந்து மோதியதில் பாடசா லைச் சிறுமியொருவர் இறந்த சம்ப வம் சற்றுமுன் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் தனது மாமனா ருடன் றோமன் கத்தோலிக்க பாடசா லைக்கு சென்று கொண்டிருந்த போதே கவசவாகன சாரதியின் அசட்டையீனத்தால் இச்சம்பவம் நடைபெ ற்றுள்ளது.
கடற்படையினருக்கான உணவுப் பண்டங்களை ஏற்றியிறக்க பயன்படுத்தப்ப ட்ட பவள் வாகனமே இவ் விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிவேகமாக இந்த வாகனத்தை செலுத்த வேண்டாமென்று கோத்தம்பர முகாம் கட்டளை அதி காரிக்கு மக்கள் பல தடவைகள் முறைப்பாடுகளை தெரிவித்திருந்ததாகவும் குறிப்பாக இரவு வேளைகளில் ஒரு முன்பக்க விளக்குடன் பல நாட்களாக இந்த வாகனம் ஒடித்திரிந்தமை குறித்தும் மக்கள் விசனம் தெரிவித்திரு ந்தமை குறிப்பிடத்தக்கது.