பிணைமுறி அறிக்கையின் அடுத்த கட்டம் என்ன.? தீர்மானம் என்ன? கட்சித்தலைவர்கள் கூட்டம் இன்று
சபாநாயகர் கருஜயசூரியவிடம் சம ர்க்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணை க்குழுவின் விசாரணை அறிக்கைகள் குறித்து அடுத்த கட்டமாக எவ்வாறு நடவடிக்கைகள் எடுப்பது என்பது குறி த்து தீர்மானம் எடுப்பதற்கான அரசி யல் கட்சித்தலைவர்களின் கூட்டம் இன்று காலை 9.30 இற்கு நடைபெற வுள்ளது.
பாராளுமன்றத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்ட த்தில் பாராளுமன்றத்தினை பிரதி நிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சி த்தலைவர்களும் பங்கேற்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இக்கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கி பிணைமுறிகள் தொடர்பான ஜனாதி பதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் ஆங்கில மொழியில் உள்ள 26 பிரதிகள் சபாநாயகரிடத்தில் கையளிக்கப்பட்டுள்ளமையினால் கட்சி த்தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒருபிரதிகள் வீதம் இன்றைய தினம் கையளிக்கப்படவுள்ளன.
பாரிய இலஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் 34தொகுதிகள் அடங்கிய விசாரணை அறிக்கையின் ஒருபிரதியே சபாநாயகரு க்கு கிடைத்துள்ளமையால் அதன் பிரதிகள் மற்றும் மொழிப்பெயர்ப்புக்களை பெறுவதில் தாமதங்கள் தொடர்வதால் அவ்வறிக்கையின் பிரதிகள் கட்சி த்தலைவர்களிடத்தில் கையளிக்கப்படமாட்டாது.
எனினும் நாளை செவ்வாய்க்கிழமை குறித்த இரண்டு விசாரணை அறிக்கைக ளும் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிகள் கொடுக்கல் வாங்கல்கள் மோசடி சம்பந்தமான ஜனாதிபதி ஆணை க்குழுவின் விசாரணை அறிக்கை மற்றும் பாரிய இலஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் 34 தொகுதிகள் அடங்கிய விசா ரணை அறிக்கை ஆகியன கடந்த புதன்கிழமை சபாநாயகர் கருஜெயசூரியவிட த்தில் கையளிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் சபை முதல்வர் ஆகியோருக்கு அவ்வறிக்கைகள் குறித்து அறிவித்ததோடு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடு ப்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக கட்சித்தலைவர்கள் கூட்டத்திற்கான அழைப்பினையும் விடுத்திருந்தார்.
அதற்கமைவாகவே இன்றையதினம் கட்சித்தலைவர்கள் கூட்டம் நடைபெறு கின்றது.
இதன்போது குறித்த அறிக்கைகள் தொடர்பில் அடுத்த கட்டமாக எவ்விதமான நடவடிக்கைகளை எடுப்பது, எப்போது விவாதம் நடத்துவது என்பது தொடர்பில் கலந்துரையாடிப்பட்டு தீர்மானிக்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.
இதேவேளை கடந்த 10ஆம் தகதி புதன்கிழமை விசேட அறிவிப்பின் பேரில் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் பிணைமுறிகள் தொடர்பான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படாமையினால் சபையில் குழப்பங்கள் ஏற்பட்டு ஈற்றில் சபையே சமர்களமானது.
இத்தகைய சூழலில் அன்றையதினம் நண்பகல் நடைபெற்ற அவசர கட்சி த்தலைவர்கள் கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி பங்குபற்றியிருக்க வில்லை. குட்சித்தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் நடை முறைப்படுத்தப்படுத்தப்படுவதிலிருந்து சபை விலகிச்செல்வதாக அக்கட்சியி ன் தலைவரும் எதிர்க்கட்சிப் பிரதம கொரடாவுமான அநுரகுமரா திஸாநயக்க எம்.பி குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.
இவ்வாறான நிலையில் இன்றையதினம் நடைபெறும் கூட்டத்தில் அக்கட்சி யினர் பெரும்பாலும் பங்குபற்றுவார்கள் என்று அக்கட்சியின் உள்ளகத்தக வல்கள் தெரிவித்துள்ளன.
இதேநேரம் சில கட்சிகளின் பிரதிநிதிகள் மேற்படி அறிக்கைள் குறித்த விவாதத்தினை உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்த லின் பின்னர் நடத்துவதற்கான வலியுறுத்தல்களை செய்வதற்கு முயற்சிக்க வுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
எவ்வாறாயினும் மக்கள் விடுதலை முன்னணி மற்றும், கூட்டு எதிர்க்கட்சி யினர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் குறித்த அறிக்கை மீதான விவாத த்தினை தேர்தலுக்கு முன்னதாக நடத்துவதற்குரிய அழுத்தங்களை விடுக்க லாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.