மத்திய வங்கி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதாயின் ஜனாதிபதி இதனை செய்யவேண்டும்.!
மத்திய வங்கி மோசடி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமாக இருந்தால் பொலிஸ் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களங்களை ஜனாதிபதி தன்வசம் எடுத்துக்கொள்ள வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
சோசலிஷ மக்கள் முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கருத்து தெரிவிக்கையில்,
மத்திய வங்கியில் பாரிய மோசடி இடம்பெற்று 3 வருடங்கள் கடந்துள்ளன. குற்றவாளிகளுக்கு எதிராக இன்னும் சட்டம் நிலை நாட்டப்படவில்லை. ஆனால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து செல்வதாக தெரிவித்து ஜனாதிபதி பொருளாதாரத்தை தனக்கு கீழ் கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தை தனக்கு கீழ் கொண்டு வருவதற்கு முன்னர் பொலிஸ் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களங்களை ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும்.
அதன் மூலமே பிணைமுறி மோசடிக்காரர்களுக்கு எதிராக சட்டம் நிலைநாட்டப்படும். அத்துடன் பிணைமுறி மோசடி இடம் பெற்று விசாரணைகளும் முடிவடைந்துள்ளன. அறிக்கை திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக ரவி கருணாநாயக்க தெரிவிக்கின்றார்.
இது தொடர்பில் பிரதமர் எந்தப் பதிலும் இதுவரை தெரிவிக்கவில்லை. அதேநேரம் அறிக்கை தொடர்பாக பிரதமர் நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் நட்டமாக்கப்பட்ட நிதியை மீள பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளதன் மூலம் பிணைமுறியில் அவருக்கு தொடர்பிருப்பதாக தெரிவித்து வந்த சந்தேகம் மேலும் உறுதியாகின்றது.
அத்துடன் மோசடி செய்யப்பட்ட நிதியை மீளப்பெற்றுக்கொள்வது அல்ல தற்போது இருக்கும் பிரச்சினை. மோசடியுடன் தொடர்புபட்டவர்கள் நீதிமன்ற த்தின் முன் நிறுத்தப்பட்டு நீதிமன்றமே தீர்ப்பளிக்க வேண்டும்.
அத்துடன் மோசடி செய்யப்பட்ட பணத்தை மீள பெற்றுக்கொள்ளலாம் என பிரதமர் தெரிவித்துள்ளதன் மூலம் அவர் இந்த பிரச்சினையை குற்றவியல் விவகாரம் அல்லாமல் சிவில் பிரச்சினையாக திசை திருப்புவதற்கு முயற்சிக் கின்றாரா என்ற சந்தேகம் எழுகின்றது.
எனவே மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணைகளை நடத்தும் அதிகாரம் இருப்பது பொலிஸ் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்காகும். அத்துடன் இதற்கு எதிராக வழக்கு தொடுக்கும் அதிகாரம் இருப்பது சட்டமா அதிபர் திணைக்களத்துக்காகும்.
ஆனால் திணைக்களங்கள் அனைத்தும் பிரதமரின் ஆலோசனையின் பிரகா ரம் இடம்பெறுவதால் இவை சுதந்திரமாக செயற்படும் சாத்தியம் இல்லை. அத னால் பிணைமுறி விசாரணை நீதியாக இடம்பெற வேண்டுமாக இருந்தால் பொலிஸ் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களங்களை ஜனாதிபதி தனக்கு கீழ் கொண்டு வரவேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.