Breaking News

மஹிந்த காலத்தில் மத்­திய வங்­கியில் மோசடியா.?

தற்­போ­தைய தேசிய அர­சாங்கம் 2020 ஆம் ஆண்டு வரை பய­ணிக்கும். ஐ.தே.க. மற்றும் சுதந்­தி­ரக்­கட்சி இணைந்த அர­சாங்­கத்தை யாரும் அசைக்க முடி­யாது.

நல்­லாட்சி அர­சாங்கம் தொடர்ந்து பய ­ணிக்குமென அமைச்­ச­ரவை பேச்­சா ளர் ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார். அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரிவித்தார். 

அமைச்­ச­ரவை பேச்­சாளர் ராஜித சேனா­ரட்ன மேலும் குறிப்­பி­டு­கையில்

கேள்வி: 
  •  ஐ.தே.க.வும் சுதந்­தி­ரக்­கட்­சியும் இணைந்த அர­சாங்கம் தொடர்ந்து பய­ணிக்­குமா? 

பதில்: 
  • இந்த அர­சாங்கம் அதன் காலம் முடி­யும்­வரை பய­ணிக்கும். ஐ.தே.க. மற்றும் சுதந்­தி­ரக்­கட்சி இணைந்த அர­சாங்­கத்தை யாரும் உடைக்க முடி­யாது. இந்த அர­சாங்கம் தொடர்ந்து பய­ணிக்கும். 

கேள்வி:  
  • 2019 ஆம் ஆண்டின் இறு­தியில் ஜனா­தி­பதி தேர்தல் வரும்­தானே? 

பதில்: 
  • ஆம் 2019 இறு­திப்­ப­கு­தியில் தேர்தல் அறி­விக்­கப்­படும். 2020 ஜன­வ­ரியில் தேர்தல் நடை­பெறும். 

 கேள்வி: 
  • தேர்­தலில் எப்­படி வேட்­பா­ளர்கள் வரு­வார்கள்? 

பதில்: 
  • தற்­போது அது­கு­றித்து பேச­வேண்­டிய அவ­சி­ய­மில்லை. அதற்கு இன்னும் காலம் இருக்­கி­றது. 

கேள்வி: 
  • இடைக்­கால அர­சாங்கம் அமைக்­க­வேண்­டு­மென ஷிரால் லக்­தி­லக்க கூறி­யுள்­ளாரே? 

பதில்: 
  • ஷிரால் லக்திலக்க யார் இதைக் கூறுவதற்கு? சந்தியில் இருப்பவர்கள் எல்லாம் இதைப்பற்றி கூறமுடியாது.