Breaking News

''வடக்கு, கிழக்கு இணைப்­புக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்''

வடக்கு,கிழக்கு மாகா­ணங்­களை இணைப்­ப­தற்­கான அழுத்­தங்­களை இந்­தியா வழங்க வேண்டுமென வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கினேஸ்­வரன் கோரிக்கை விடுத்­துள்ளார்.

இந்­தியத் தூதுவர் தரன்ஜித் சந்­துவை நேற்று சந்­தித்துப் பேசி­ய­போதே முத­ல­மைச்சர் இவ்­வாறு கோரி­யுள்ளார். வடக்கின் அபி­வி­ருத்தி செயற்­பா­டுகள் மற்றும் வாழ்­வா­தார நகர்­வு­களை கை யாள்­வது குறித்து இந்­திய உயர்ஸ்­தா­னிகர் மற்றும் வட­மா­காண முத­ல­மை ச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் ஆகி­யோ­ருக்­கி­டையில் நேற்று பேச்­சு­வார்த்தை இடம்­பெற்­றது. 

தூத­ர­கத்தில் நடை­பெற்ற இந்தப் பேச்­சு­வார்த்­தையில் வடக்கு, கிழக்கு இணை ப்பின் அவ­சியம் குறித்து முத­ல­மைச்சர் வலி­யு­றுத்­தி­யதை அடுத்து அந்த விட யம் தொடர்பில் மத்­திய அர­சாங்­கத்தின் இணக்­கப்­பா­டுகள் குறித்து ஆராய்­வ­தாக உயர்ஸ்­தா­னிகர் முத­ல­மைச்­ச­ரிடம் தெரி­வித்­துள்ளார். 

இச் சந்­திப்புத் தொடர்பில் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் கேச­ரிக்கு கருத்துத் தெரி­விக்­கையில், இந்­திய அர­சாங்­கத்­துடன் ஏற்­க­னவே வட­மா­காண சபை சார்பில் நாம் நீண்­ட­கால பேச்­சுக்­களை முன்­னெ­டுத்­து ள்ளோம். 

இதில் ஒரு கட்­ட­மா­கவே நேற்றும் நான் இந்­திய உயர்ஸ்­தா­னி­கரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினேன். இரண்டு நாட்­க­ளுக்கு முன்னர் வடக்கின் காங்­கே­சன்­துறை துறை­மு­கத்தை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான இரு­நாட்டு உடன்­ப­டிக்கை கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது. இது குறித்து வினாவினேன். 

காங்­கே­சன்­துறை துறை­முக அபி­வி­ருத்தி மற்றும் பலாலி விமா­ன­நி­லை­யத்தின் அபி­வி­ருத்­திகள் குறித்து ஆரம்­பத்தில் இருந்தே இந்­திய அர­சாங்­க த்தின் கவ­னத்­திற்கு நாம் கொண்­டு­வந்­துள்ளோம். ஆகவே அவற்றை கையாள் ­வது குறித்து கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. 

மேலும் தூத்­துக்­குடி, தலை­மன்னார் இடை­யி­லான கப்பல் சேவை­யினை முன்­னெ­டுப்­பது குறித்தும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. ஆகவே இந்த நகர்­வுகள் குறித்து பரி­சீ­லனை நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

மேலும் வட­மா­கா­ணத்தில் 50 ஆயிரம் வீடுகள் அமைப்­பது குறித்து ஆரம்­பத்தில் இருந்து கலந்­து­ரை­யா­டப்­பட்டு வந்த நிலையில் எவ்­வா­றான வீடுகள் அமைப்­பது என்­பது குறித்த சில சிக்கல் நிலை­மைகள் காணப்­பட்­டன. பரி­சீ­லனை செயற்­பா­டு­களும் கையா­ளப்­பட்­டன. 

இப்­போது அவை குறித்து ஒரு தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்ள நிலையில் அதற்­கான நிதி ஒதுக்­கீ­டுகள் குறித்து பேசி­யி­ருந்தோம். வீடு­களை அமைப்­பது குறி த்த அவர்­களின் தீர்­மா­னத்தை விரைவில் தெரி­விப்­ப­தாக அவர்கள் குறிப்­பிட்­ட னர். 

மேலும் வீட்டுத் திட்டம் அமைப்­பது குறித்து மத்­திய அர­சாங்­கத்­துடன் இந்­திய அர­சாங்கம் பேச்­சு­வார்த்தை நடத்த வேண்டும் எனவும் உயர்ஸ்­தா­னிகர் தெரி­வித்தார். அத்­துடன் யாழ்ப்­பாணம் நகர மண்­டப புன­ர­மைப்­பு­க­ளுக்­காக 800 மில்­லியன் ரூபா நிதியை இந்­தி­யா­விடம் இருந்து கோரி­யி­ருந்தோம். 

அது குறித்தும் ஆரா­யப்­பட்­ட­துடன் மயி­லிட்டி மீன்­பிடி துறை­முக புன­ர­மைப்பு குறித்து இதன்­போது கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்­பிலும் அத­னூ­டாக தமிழ் மக்­க­ளுக்­கான பாது­காப்­புகள் குறித்தும் நாம் இதன்­போது பேசி­யி­ருந்தோம். 

வடக்கு, கிழக்கு இணைப்பு விவ­கா­ரத்தில் ஆழமான பேச்சுக்களை முன்னெ டுக்க வேண்டியுள்ளது. அத்துடன் வடக்கின் நகர்வுகள் குறித்து மத்திய அரசா ங்கத்தின் அனுமதிகள் மற்றும் ஒத்துழைப்பும் அவசியம். 

ஆகவே இவை குறித்து பேசுவதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். மீண்டும் நாம் நல்லெண்ண அடிப்படையில் பேச்சு வார்த்தைகளை முன்னெ டுப்போமெனத் தெரிவித்தார்.