அரசாங்கத்தை தூக்கி எறியும் போராட்டம் ஆரம்பமாம் - அனுரகுமார திசாநாயக
தேசிய அரசாங்கம் களைவதை பிரதான இரண்டு கட்சிகளும் விரும்ப வில்லை. இரு தரப்பினரும் அமைச்சுப்பதவிகளை துறக்கவும் விரும்பப்போவ தில்லை.
ஆகவே 2020 ஆம் ஆண்டு வரையில் இவர்கள் பொய்யான காரணிகளை கூறியவாறு ஆட்சியை தொடர்வா ர்கள் என மக்கள் விடுதலை முன்ன ணி தெரிவித்தது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வெற்றி மூலம் அரசாங்கத்தை ஆட்டம் காண வைக்கும் எமது போராட்டம் தொடருமென அக்கட்சி தெரிவி ப்பதுடன் மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றபோது தேசிய அரசாங்கம் தனது உட ன்படிக்கை காலத்தை கடந்து செயற்பட்டு வருகின்றமை குறித்து வினவிய போதே கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக இவ்வாறு தெரிவித்து ள்ளார்.