கூட்டமைப்பின் ஊடாகவே உரிமைகளை வென்றெடுக்க முடியுமென- வேட்பாளா் அஞ்சலா!
"கூட்டமைப்பு உடைந்தாலோ கூட்ட மைப்பிலிருந்து யாரும் வெளியேறி னாலோ தமிழ் மக்கள் மகிழ்சிய டைய மாட்டார்கள் ஆனால் சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள். சிங்க ள மக்களை மகிழ்ச்சிப்படுத்தவா நாம் போராடினோம்?" என வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு மருத மடு வட்டாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் கோகுலகுமார் அஞ்சலா தெரிவித்தார்.
வவுனியா விளக்கு வைத்த குளம் கிராமத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமை ப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து உரையாற்றிய வேட்பாளர் அஞ்சலா இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
"உயிர்களை இழந்து தியாகங்களை செய்தோம். எமக்குள் ஒற்றுமை குலை ந்தால் எமது உரிமைப் போராட்டத்தை வென்றெடுக்க முடியுமா? தமிழ் தேசி யக் கூட்டமைப்பு என்பது மிகப் பெரியதொரு கூட்டுக்குடும்பம்.
எமக்குள்ளே ஏற்படும் பிரச்சனைகளை பேசி தீர்க்க முடியா விட்டால் எப்படி எம்மால் அரசா ங்கத்தோடு பேசி எமது மக்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியும்.
தனித்தனியாக பிரிந்து நிற்பது நாம் எமது இனத்துக்கு செய்கின்ற மாபெரும் துரோகம்.
கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள், ஒற்றுமைக்கு வாக்களியுங்கள், உரிமைக்கு வாக்களியுங்கள் என்று கடந்த 18 வருடங்களுக்கு மேலாக எமது மக்களிடம் வாக்கு கேட்ட வாய்களெல்லாம் இப்போது கூட்டமைப்புக்கு எதி ராக வாக்களிக்கச் சொல்லும் வாய்களாகி விட்டது.
எதுக்காக விடுதலைப் போராட்டத்தை காட்டிக்கொடுத்த ஒரு கட்சியோடு வன்னியில் இறுதி யுத்தத்திலே ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போக வும், கொல்லப்படவும் காரணமாகிப்போன ஒரு கட்சியோடு ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் வெறுத்த, நிராகரித்த ஒரு கட்சியோடும் அதன் தலைவரோ டும் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று இணைந்திருப்பதை நாம் ஏற்று க்கொள்ளவோ, ஆதரிக்கவோ முடியாது.
சிங்கள மக்களையும், சிங்கள அரசாங்கத்தையம் மகிழ்ச்சிப்படுத்த நமது ஒற்றுமையை சீர்குலைக்கக் கூடாது.
அப்போது விடுதலைப் புலிகள் பலமாக இருந்த போதும் இப்போது கூட்டமைப்பு பலமாக இருக்கின்ற போதும் நாம் வெல்ல முடியவில்லை என்றால் எப்போதுமே நாம் வெல்லமுடியாது.
எனவே பிரிந்தவர்கள் எல்லாம் மீண்டும் கூட்டமைப்பில் இணைந்து கொள்ள வேண்டும்.
எமது மக்கள் அதனைத்தான் எதிர்பார்க்கின்றனர். கூட்டமைப்புக்கு மக்கள் போடும் வாக்குகள் பிரிந்தவர்களை மீண்டும் வரவழைக்கும் வாக்குக ளாக அமைய வேண்டும்.
தேர்தல் முடிவுகள் அவர்களின் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்துமென நம்புகின்றேன்.
கூட்டமைப்பின் ஊடாகவே உரிமைகளை வென்றெடுக்க முடி யுமென்ற நம்பிக்கைதான் நான் கூட்டமைப்பு வேட்பாளராவதற்கு காரணம். என்னால் வேறு எந்தக் கட்சியையும் தெரிவு செய்ய முடியாது.
மக்கள் பக்கமுள்ள கட்சியோடு இணைந்து உரிமைக்கும், அபிவிருத்திக்கும் குரல்கொடுக்க நீங்கள் வீட்டுச் சின்னத்துக்கு வாக்களித்து எம்மை பலப்படுத்து ங்கள்.
25க்கும் மேற்பட்ட கிராமங்களை கொண்ட மிகப் பின்தங்கிய மருதமடு வட்டாரத்தில் இருந்து கடந்த பிரதேச சபை நிர்வாகத்தில் யாரும் இல்லாதி ருந்த குறையை என்னால் நீக்கமுடியுமென நம்புகின்றேன்" எனத் தெரிவி த்துள்ளார்.