Breaking News

வவுனியா இ.போ.ச ஊழியர் மீது பொலிஸார் தாக்குதல் : ஊடகவியலாளரை அச்சுறுத்திய பொலிஸார்!!!

வவுனியா புதிய பஸ் நிலையத்தில் பொலிஸாருக்கும் இலங்கை போக்கு வரத்து சபையினருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதுடன் இ.போ.ச ஊழியர் ஒருவர் மீது பொலிஸார் தாக்குதல் நடாத்தியுள்ளதுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வைத்தியசாலை பொலிஸாரிடம் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை புதிய பஸ் நிலைய த்தில் செய்தி சேகரித்து கொண்டிரு ந்த பிராந்திய ஊடகவியலாளர்கள் மீதும் குறித்த பொலிஸ் அதிகாரி அச்சுறுத்தியுள்ளார்.

நேற்று பிற்பகல் 4 மணியளவில் வவு னியா புதிய பஸ் நிலையத்திற்குள் இ.போ.சபையினரின் வெளிமாவட்ட பஸ்கள் உள் நுழைக்கப்பட்டதையடுத்து இ.போ.சபையினருக்கும் பொலிஸா ருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது இ.போ.ச ஊழியர் ஒருவர் மீது பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்கியுள்ளார். 

இதனால் படுகாயமடைந்த ஊழியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி க்கப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலை பொலிஸாரிடம் தன்னை பொலிஸ் அதி காரி ஒருவர் தாக்கியதாக முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து இ.போ.சபையினர் புதிய பஸ் நிலையத்திலிருந்து தமது பஸ்க ளை எடுத்துகொண்டு சாலைக்கு திரும்பியுள்ளனர். நேற்றைய தினம் எடுக்க ப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் வெளிமாவட்ட பஸ்கள் புதிய பஸ் நிலையத்திற்குள் உட்செல்வது தடை செய்யப்பட்டிருந்தது.

தனியார் பஸ் உரிமையாளர்களுடன் ஊடகவியலாளர்கள் செய்தி தொடர்பாக கலந்துரையாடிக்கொண்டிருந்த வேளை குறித்த பொலிஸ் அதிகாரி குறுக்கே வந்து ஊடகவியலாளர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கட்டாயப்படுத்திய துடன் தகாத வார்த்தை பிரயோகங்களையும் மேற்கொண்டதுடன் மார்பில் கைவைத்து அச்சுறுத்தல் விடுத்துமுள்ளார். 

இது சம்பந்தமாக பிரதி பொலி ஸ்மா அதிபரிடம் ஊடகவியலாளர்கள் முறை யிட்டதையடுத்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்திற்கு விரை ந்து இரு தரப்பினரையும் சுமூக நிலைமைக்குள் கொண்டு வந்துள்ளனர்.