ஊவா கல்விச் செயலர், பதுளை ஓ.ஐ.சி. விசாரணைக்காக மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!
பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் ஆர். பவானியை முழந்தாளிடச் செய்து மன்னிப்பு கோரச் செய்தமை, அச்சம்பவம் தொடர்பில் பொய்யான வாக்கு மூலத்தை வழங்க அச்சுறுத்தியமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசேட விசாரணைகளை மேற்கொள்ள ஆர ம்பித்துள்ளது. ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் ஆகியோ ரின் முறைப்பாட்டுக்கு அமைவாக இவ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ் விவகாரம் குறித்த விசாரணைகளுக்கு இன்று காலை 10.00 மணிக்கு கொழும்பில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு, ஊவா மாகாண கல்விச் செயலாளர் சந்தியா அம்பன்வெல உள்ளிட்டோருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
ஊவா மாகாண கல்விச் செயலாளர் சந்தியா அம்பன்வெல, மாகாண கல்விப் பணிப்பாளர் ரத்நாயக்க, வலய கல்விப் பணிப்பாளர் ரணசிங்க, பதுளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மாகாண சபை ஊழியர்களான பாலித்த ஆரியவங்ச, பிரசன்ன பத்மசிறி, அமில கிரிஷாந்த ரத்நாயக்க ஆகியோருக்கே விசாரணைகளுக்கு ஆஜராக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எச்.ஆர்.சி./236/18 எனும் முறைப்பாட்டு இலக்கத்துக்கு அமைவாக இந்த அறிவி த்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணை க்குழுவின் உயர் அதிகாரி யொருவர் தெரிவித்தார்.
விசாரணைகளுக்கு அழைக்கப்பட்ட மேற்படி நபர்களுக்கு மேலதிகமாக முறைப்பாட்டாளர்களான ஜோஸப் ஸ்டாலின் மற்றும் கீர்த்தி தென்னகோன் பாதிக்கப்பட்ட அதிபர் ஆர். பவானிக்கும் இன்று மனித உரிமைகள் ஆணை க்குழுவுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதிபர் ஆர். பவானியை பாதிக்கப்பட்ட தரப்பாக கருதி இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்யப்பட்டு ள்ள முறைப்பாடுகளில், ஊவா முதலமைச்சரும் மேலே பெயரிடப்பட்ட ஊவா கல்விச் செயலர் உள்ளிட்டோரும் செய்த செயல் காரணமாக அரசியலமை ப்பின் 12 (1) ஆவது அத்தியாயம் மற்றும் 13 ஆம் அத்தியாயம் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ள மொழி மற்றும் கருத்து வெளிப்பாட்டு உரிமை, 10 ஆவது அத்தியாயம் ஊடாக உறுதி செய்யப்படும் மன அமைதி ஆகியன கடுமையாக மீறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.