தமிழில் இசையான பொலிஸ் கீதம் !
இலங்கை பொலிஸ் கீதம் பொலிஸ் மா அதிபரின் முன்னிலையில் தமிழ் மொழியில் வடக்கு மாகாணத்தில் முதன்முறையாக இசைக்கப்பட்டுள்ளது.
151 வருட இலங்கை பொலிஸ் வர லாற்றில் தற்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் திட்ட த்தின் கீழ் பொலிஸ் கீதம் இயற்றப்ப ட்டு இசைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருகை யில்,
151 வருட வரலாற்றை கொண்ட இலங்கை பொலிஸ் திணைக்களம் தம க்கென ஓர் பொலிஸ் கீதத்தை அண்மையிலேயே இயற்றியுள்ளது. அந்த வகையில் இந்த பொலிஸ் கீதமானது வடக்கு மற்றும் கிழக்கு பிதேசங்களில் வசிக்கும் தமிழ் மக்களின் மனதைதொடும் வகையில் கந்தப்பு ஜெயந்தனால் தமிழ் மொழியில் மாற்றம் செய்யப்பட்டது.
மேலும் பொலிஸ் கீதம் தமிழ் இசை யமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தனால் இசைக்கப்பட்டு, இதன் இருவெட்டு ஒன்றும் கடந்த 20 ஆம் திகதி வவுனியா பொலிஸ் கட்டடத்தொகுதியில், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய சுந்தரவி னால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் அன்றையதினம் முல்லைத்தீவு புதிய பொலிஸ் நிலைய கட்டடத் தொகுதியின் அடிகல் நாட்டும் நிகழ்வின் போது அக்கீதம் முதன்முறையாக இசைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வன்னி பிரதேசத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்ன கோன் உள்ளிட்ட வட மாகாணத்திலுள்ள உயர் பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
பல்லின மக்கள் செறிந்து வாழும் இந்நாட்டில் இன, மத பாகுபடின்றி அனைவ ரும் சமமாக மதிக்கப்பட்டு சேவை வழங்கும் பொலிஸ் திணைக்களத்தில், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரையின் கீழ் பொலிஸ் கீதம் தமிழில் இயற்றப்பட்டு இசைக்கப்பட்டுள்ளது.