Breaking News

அரசுக்கு ஆலோசனை சந்திரிகா ! ஆட்சேபனை தெரிவித்த - அமைச்சர் சுசில்!

அர­சுக்கு ஆலோ­சனை வழங்­கும் அதி­கா­ரம் முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிகா குமா­ர­துங்­க­வுக்கு இல்லையென அமைச்­சர் சுசில் பிரே­ம­ஜ­யந்த தெரி­வித்­தார். 

கூட்டு அரசு தொடர்­பில் சுதந்­தி­ரக் கட்சி மற்­றும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­க­ளுக்கு இடை­யில் ஏற்­ப­டுத்­திக் கொள்­ளப்­பட்ட இரண்டு ஆண்­டுகளுக்கான புரிந்துணர்வு உடன்­ப­டிக்கை நேற்­று­டன் நிறை­வ­டைந்­துள்ளது. 



உடன்­ப­டிக்­கையை தொடர்ந்­தும் நீடிக்க நட­வ­டிக்கை மேற்­கொள்­ளு­மாறு சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­ன­ருக்கு முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிகா பணித்­துள்­ள­தாக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டளஸ் அள­கப்­பெ­ரும தெரி­வித்­தி­ருந்­தார்.

டள­ஸின் கூற்றை நிரா­க­ரித்­துள்ள அமைச்­சர் சுசில் பிரே­ம­ஜ­யந்த கூட்டு உடன்ப­டிக்­கையை நீடிப்­பது தொ டர்­பான பணிப்­பு­ரை­களை வழங்க முன்­னாள் ஜனாதிபதி சந்­தி­ரிகா­வுக்கு எவ்­வித உரி­மை­யும் இல்லை. 

அதே நேரம் எதிர்­வ­ரும் உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல்­க­ளின் பின்­னர் 2018ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 18ஆம் திகதி கூட்டு அர­சின் புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கை நீடிப்பு குறித்துத் தீர்­மா­ன­மெ­டுக்கப்­ப­டுமென சுசில் தெரிவித்துள்ளார்.