Breaking News

முழுப் பணத்தையும் மீளப்பெற முடியுமென - ரணில் !

பிணைமுறி மோசடி அறிக்கையில் ஐக்கிய தேசிய கட்சியின் எவராயி னும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தால் அது தொடர்பில் ஆராய அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில் குழு வொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக் குழுவின் பரிந்துரைக்கு அமைய செய ற்படுவோம். ஆணைக்குழுவின் பரி ந்துரைகளை அமுல்படுத்த அர்ப்பணி ப்புடன் செயற்படுவோமென ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமரு மான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். விசாரணை ஆணைக்குழு குறிப்பி ட்டுள்ளதைப்போன்று 9.2பில்லியன் ரூபாவை பேப்பச்சுவல் நிறுவனத்திடம் இருந்து மீளப்பெற்றுவிட முடியும். அதற்காக ஆணைக்குழு முன்வைத்துள்ள செயற்பாட்டை பின்பற்றுவோம். முழுப்  பணத்தையும் அரசாங்கம் பெறமுடி யும். 

அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படாது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ஊழல் மோசடிகளை தடுக்கவே நாங்கள் பதவி க்கு வந்தோம். 

கட்சி நிறம் மற்றும் எவ்வாறான பதவிகள் என்றாலும் ஊழலுக்கு எதிராக நட வடிக்கை எடுக்கப்படும். நாங்கள் ஆட்சிக்கு வந்து சில காலத்தில் பிணைமுறி குறித்த சர்ச்சை எழுந்தது. அதனை நாங்கள் கீழே போட்டு மறைக்கவில்லை. இரண்டு வாரங்களில் விசாரணை குழு ஒன்றை நியமித்தோம். 

விசாரணைக் காலப்பகுதியில் மத்திய வங்கியின் ஆளுநர் சேவையிலிருந்து விலகினார். இது தொடர்பில் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டது. தேவை எனினும் பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்குமாறு நான் கோரினேன்.

அத்துடன் குழுவின் விசாரணை அறிக்கையும் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பி க்கப்பட்டது. இதுவரை காலமும் கோப் குழுவின் தலைமையை ஆளும் கட்சி யை சேர்ந்த ஒருவரே வகித்தார். 

எனினும் தற்போதைய ஆட்சியில் கோப் குழுவின் தலைமைப் பதவியை எதி ர்க்கட்சியை சேர்ந்த ஒருவர் வகிக்கின்றார். கோப் குழு மத்திய வங்கி விவகா ரம் குறித்து விசாரித்தது. அந்த அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்ப ட்டது. அது தொடர்பிலும் விவாதமும் நடத்தப்பட்டது. 

பின்னர் தகுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்காக அறிக்கை சட்ட மா அதி பர் திணைக்களத்துக்கு 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வழ ங்கப்பட்டது. அதன் பின்னர் ஜனாதிபதி என்னுடன் கலந்துரையாடி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமித்தார். 

அந்த ஆணைக்குழுவுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கினோம். எமது அமை ச்சர்கள் ஆணைக்குழு முன் சென்றனர் நானும் சென்றேன். குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதும் முன்னர் எந்த அரசாங்கமும் அது குறித்து விசாரிக்க வில்லை. 

நாங்கள் மூன்று முறை இது குறித்து விசாரித்தோம். கடந்த ஆட்சிக்காலத்தில் பலமுறை இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. பாராளுமன்ற த்தில் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனால் எதுவும் நடக்கவில்லை. 

எமது நாட்டில் நிதி கட்டுப்பாடு பாராளுமன்றத்துக்கே உள்ளது. கடந்த கால த்தில் பாராளுமன்றம் இந்த நிலையை மறந்திருந்தது. எனினும் பாராளு மன்றம் அந்த அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு சந்தர்ப்பமாக பிணை முறி விவ காரத்தை பார்த்தோம். 

இதன் மூலம் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுகின்றது. இந்த பிணைமுறி காரணமாக பேப்பச்சுவல் நிறுவனம் 9.2 பில்லியன் ரூபாவை சட்டவிரோதமாக உழைத்துள்ளதாக ஆணைக்குழு அறிக்கை கூறுகின்றது. எமது அமைச்சின் கீழ் வருகின்ற மத்திய வங்கி குறித்த நிறுவனத்திடமிருந்து தற்போதைக்கும் 12 பில்லியன் ரூபாவை வைத்துக்கொண்டுள்ளது. 

எனவே ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளதைப்போன்று 9.2 பில்லியன் ரூபாவை மீளப்பெற்றுவிட முடியும். அதற்காக ஆணைக்குழு முன்வைத்துள்ள செயற்பா ட்டை பின்பற்றுவோம். முழு பணத்தையும் அரசாங்கம் பெறமுடியும். 

அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படாது. அதேபோன்று இந்த மோசடியில் யாராவது அதிகாரி ஒருவர் தொடர்புட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடி க்கை எடுக்கப்படும். மோசடி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதிலிருந்து எமது அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஒத்துழைப்பும் வழ ங்கியுள்ளோம். 

தற்போது ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். எமது அரசாங்கம் முறையான அரசாங்கம் என்பதனை இதன்மூலம் நிரூபித்துள்ளோம். வரலாற்றில் எந்த அரசாங்கமும் இவ்வாறு செயற்பட்டதில்லை. சம்பிராதயங்களை மீறியமை தொடர்பில் எமது அமை ச்சர் இராஜினாமா செய்தனர். 

தலையீடு இன்றி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மக்கள் சுதந்திரமாக கருத்து வெ ளியிட்டனர். ஊடக சுதந்திரம் உள்ளது. பிணைமுறி மோசடி அறிக்கையில் எமது கட்சியின் யாராவது குற்றம் சாட்டப்பட்டிருந்தால் அது தொடர்பில் ஆராய திலக் மாரப்பன தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அக் குழுவின் பரிந்துரைக்கு அமைய செயற்படுவோம். அதுதான் ஐக்கிய தேசிய கட்சியாகும். அதனை நாங்கள் உருவாக்கிவருகின்றோம். ஜனவரி 8 ஆம் திகதி இந்த நாட்டு மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை நாங்கள் உருவாக்கு வோம். 

அது ஒரு இரவில் செய்யப்பட முடியாதது. இந்த விசாரணை ஊடாக அதற்கு ஒரு ஆரம்பம் ஏற்பட்டுள்ளது. குறைபாடுகளை நிவர்த்தி செய்து சரியான பாதையில் பயணிக்கின்றோம். கடந்த கால மோசடி மட்டுமன்றி நிகழ்கால தவறுகள் குறித்து தேடுகின்றோம். விசாரணை நடத்துவோம். தேவையான நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்துள்ளார்.