Breaking News

புலிக்கு பிறந்தது பூனையாகுமா? : களத்தில் கலக்கும் ட்ராவிட், சுனில் ஜோஷியின் வாரிசுகள்!!!

இந்தியா - கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க பி.டி.ஆர் கிண்ண கிரிக்கெட் போட்டி ஒன்றில் ட்ராவிட்டின் மகன் சமித் விவேகானந்தா பள்ளி அணிக்கு எதிராக 150 ரன்களை எடுத்து தன் அணியான மல்லையா அதிதி இண்டெர்நேஷனல் பள்ளிக்கு 412 ரன்கள் வித்தியாச வெற்றியைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.


ராகுல் ட்ராவிட் நியூஸிலாந்தில் இந்திய அணிக்கு பயிற்சி அளித்து வருகிறார். ட்ராவிட் மகன் சமித் மட்டு மல்ல இதே போட்டியில் முன்னாள் இடது கை இந்திய வீச்சாளர் சுனில் ஜோஷியின் மகன் ஆர்யன் ஜோஷி யும் 154 ரன்கள் எடுத்துள்ளார்.

சமித்தும்,ஜோஷியும் இணைந்து பெரிய கூட்டணி அமைக்க, மல்லையா அதிதி பள்ளி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 500 ஓட்டங்களை குவி த்துள்ளது. சமித் மற்றும் ஆர்யன் ஜோஷியின் துடுப்பாட்டத்திற்கு பிறகு விவேகானந்தா பள்ளி அணியை, மல்லையா அதிதி இண்டெர்நேஷனல் பள்ளி அணியினர் வெறும் 88 ஓட்டங்களுக்கு சுருட்டினர்.  

2015 ஆம் ஆண்டு கோபாலன் கிரிக்கெட் தொடரில் சமித் சிறந்த பேட்ஸ்மெனா கத் தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது