Breaking News

ரவி கருணாநயக்காவிற்கு நீதிமன்று அழைப்பாணை!

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநயக்காவை எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டு ள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தினால் நேற்றைய தினம் இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

2001 -2002 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ரவி கருணாநாயக்க வர்த்தகத்துறை அமைச்ச ராக இருந்த போது, சதோச நிறுவனத்தி ற்கான அரிசி கொள்வனவில் 4 மில்லியன் ரூபா நிதி, முறையற்ற விதத்தில் பயன்ப டுத்தப்பட்டதாக நேற்று தாக்கல் செய்யப்ப ட்ட மனு தொடர்பான விசாரணையின் போதே இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. சதோச நிறுவன முன்னாள் தலைவரான விமல் பேரராவுக்கு எதிராக, லஞ்ச ஊழல் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று விவாதத்திற்கு எடு த்துக் கொள்ளப்பட்டது. 

அவ் வழக்கு விசாரணையின் போது, ரவி கருணாநாயக்கவின் பெயரும் பய ன்படுத்தப்பட்டதன் காரணமாக, விசாரணை மேற்கொள்வதற்காக ரவி கருணா நாயக்காவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டு ள்ளது.