அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் சம்பந்தன் அழைப்பு !
தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை அடையும் நோக்கில் சேர்ந்து செய ற்பட முன்வருமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் தலைவர்களிடமும் வேண்டுகோள் விடுக்கிறேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை வரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள புதுவருட வாழ்த்துச் செய்தியிலேயே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்....
இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்தப் புத்தாண்டு செழிப்பானதும் மகி ழ்ச்சியானதுமாக அமைய எனது இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.
இந்தப் புதிய வருடத்தை எதிர்பார்ப்போடும் நம்பிக்கையோடும் வரவேற்கின்ற இந்தத் தருணத்தில், ஒன்றுபட்ட நாட்டின் மக்களாய் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் உழைக்க முன்வரவேண்டும் என்பதே எனது பிரார்த்தனையாகும்.
இந்தப் புதிய வருடத்தில் முன்னேறிச் செல்கின்றவேளை கடந்த வருடத்தில் நாம் கண்ட சாதகமான காரியங்களையும் நாம் கற்றுக்கொண்ட பாடங்களையும் மனதில் முன்னிறுத்திக் கொள்வோமாக.
இந்தப் புதிய வருடத்தை ஆரம்பிக்கின்ற வேளை, இந்த நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரமான ஒரு தீர்வை அடையும் நோக்கில் சேர்ந்து செயற்பட முன்வருமாறு நான் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களிடமும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
இதனை செய்வதன் மூலம் எமது எதிர்கால சந்ததியினருக்கு ஒரு வளமான எதிர்காலத்திற்கு நாம் வழிசமைக்க முடியும். அனைவருக்கும் ஆசிர்வாதமான இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.