பொலீஸ் சோதனையின்பின்பே சுமந்திரனின் கூட்டத்திற்கு அனுமதி(படங்கள்)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதோடு கூட்டத்திற்கு வந்த மக்கள் பொலீஸ் சோதனையின் பின்பே அனுமதிக்கப்பட்டதாக தமிழ்கிங்டொத்தின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முல்லைத்தீவு உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான பிரசார கூட்டம் இன்று மாந்தை கிழக்ககில் இடம்பெற்ற போதே இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
மாலை 3.00 மணிக்கு ஆரம்பமான இக் கூட்டத்திற்கு மதியத்தில் இருந்தே மைதானம் அமைந்துள்ள பகுதியை சூழ பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்து நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் வருகை தந்தபோது விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு படையினர் புடைசூழ மண்டபத்திற்கு வருகை தந்திருந்தார்.
பின்னர் அவர் உரையாற்ற முற்பட்டபோது மண்பத்தினை சூழ விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கியிருந்த நிலையில் அவர் உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முக்கியமான செய்திகள் மற்றும் காணொளிகள் தொடர்ந்து பதிவேற்றப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.