இயலாவிட்டால் ஒதுங்கி வழிவிடுங்கள் சம்பந்தனுக்கு விக்கி ஆலோசனை
எம்முட் பலர் கூடி தேர்தல் விஞ்ஞாபனத்தை வரைந்தோம் அதன்படி மக்களிடம் ஆணையினை பெற்றோம்.
ஆனால் அவற்றை பெற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தலைமைகள் தீர்மானித்தால் தமது தலைமைத்துவத்தை வேறுயாரிடமாவது கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொள்வதே உசிதமானது என சம்பந்தனுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன்.
அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பந்தன் குணமடைந்து வீட்டுக்கு வந்திருந்தார் இருந்தும் மீண்டும் அண்மையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் சுவாசதொற்று அங்கி அணிந்தவாறு கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.