சுமந்திரனுக்கு போராட்டத்தைப் பற்றி என்ன தெரியும்? சுரேஸ் அதிரடி!
போராட்டமும் அதன் வலியும் தெரியாத சுமந்திரனே தமிழர்களுக்கு விரோத மாகச் செயற்படுவதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலை வர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை யில் கிடாச்சூரி வட்டாரத்தில் போட்டி யிடும் அ.அருந்தவராசாவை ஆதரி த்து நடைபெற்ற பிரசாரக் கூட்ட த்திலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்.........
தமிழ் மக்களுக்கு சரியான தீர்வ வேண்டும் என்பதற்காக தமிழ் மக்கள் தமது உடமைகள் உறவுகளை இழந்தி ருக்கின்றனர் எனத் தெரிவித்த அவர், சுமந்திரன் என்ற நபருக்கு வடக்கு கிழக்கை பற்றி, போராட்டத்தை பற்றி, அதன் வலிகளைப்பற்றி என்ன தெரி யுமென கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் பிறந்து வளர்ந்து கொழும்பில் படித்து கொழும்பில் உத்தியோகம் பார்த்த ஒருவருக்கு இந்த வலிகள் புரியுமா என்பதனை நீங்கள் எண்ணிப்பாரு ங்கள் என்று மக்களை நோக்கி கூறிய அவர், அதன் காரணமாகத்தான் சுமந்திர னின் செயற்பாடுகள் தமிழர்களுக்கு விரோதமாக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், "இடைக்கால அறிக்கையில் நாம் அரைவாசி தூரம் போய்விட்டோம் என்றும், மிகுதி அரைவாசித்தூரம் போகவேண்டுமாக இருந்தால் நீங்கள் எங்களுக்கு ஆணை வழங்க வேண்டுமென சுமந்திரன் கூறு கின்றார்.
அது இல்லாத ஒன்றுக்கான ஆணை. இடைக்கால அறிக்கை என்பது தமிழ் மக்களை குழிதோண்டி புதைக்கக்கூடிய விடயம் என்பதை புரிந்துகொண்டு அதற்கு ஆணை கேட்கின்றார். நீங்கள் வீட்டிற்கு பொடும் புள்ளிடியென்பது நாங்கள் எங்களை குழிதோண்டிப் புதைப்பதற்கான ஆணையென்பதேயாகும்.
தந்தை செல்வாவின் சின்னம் வீடாக இருக்கலாம். தமிழர் விடுதலைக்கூ ட்டணி வந்ததன் பின்னர் உதயசூரியனாக இருக்கலாம். அது சில காலம் முட க்கப்பட்டதனால் மீண்டும் வீட்டிற்கு போகலாம்.
ஆனால் நாம் இங்கு பார்க்க வேண்டியது கொள்கை ரீதியாக எமது தீர்வை படிப்படியாகவேனும் பெற்றுக்கொள்ள போகின்றோமா இல்லையேல் எங்களை ஒட்டு மொத்தமாக விலை பேசி விற்கப்போகின்றோமா என்பதே ஆகும்" எனத் தெரிவித்துள்ளார்.