Breaking News

''ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை அதி­கார பீடங்­க­ளுக்கு அனுப்பி துரித நட­வ­டிக்கை எடுங்கள்''

சர்ச்­சைக்­கு­ரிய பிணை­மு­றிகள் விற்­பனை குறித்து ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு வின் பரிந்­து­ரை­களை உரிய அதி­காரபீடங்­க­ளுக்கு அனுப்பி துரித நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டுமென எதிர்க்­கட்­சித் ­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் பகி­ரங்க கோரிக்கை விடுத்­துள்ளார்.


மேலும் கடந்த காலங்­களில் நடை­பெற்ற பொது­ச்சொத்­துக்கள் துஷ்­பி­ர­யோகம், ஊழல் மோச­டிகள் தொட ர்பில் உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வேண்டுமென வலி­யு­றுத்­தி­ய சம்ப ந்தன் ­உண்­மையின் பக்­கமே கூட்­ட­மைப்பு இருக்குமென சுட்­டிக்­காட்­டி­யு ள்ளார்.

சர்ச்­சைக்­கு­ரிய இலங்கை மத்­தி­ய ­வங்­கியின் பிணை­மு­றிகள் விற்­பனை தொட ர்பில் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழவின் பரிந்­து­ரைகள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டத்தில் கைய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது.

அத­னை­ய­டுத்து ஆணைக்­கு­ழவின் பரிந்­து­ரை­களை கவ­னத்­திற்­கொண்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் நிதி அமைச்சர் ரவி­க­ரு­ணா­நா­யக்க, மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்­திரன் பேர்ப்­பச்­சுவல் நிறு­வ­னத்தின் அர்ஜுன் அலோ­சியஸ், கசுன் பலி­ஹேன மற்றும் பொறுப்புக் கூற­வேண்­டிய அனை­வ­ருக்கும் எதி­ராக குற்­ற­வியல் சிவில் சட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும் என்று பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ள­மைக்கு இணங்க நட­வ­டிக்­கைகள் எடுப்­ப­தற்­கு­ரிய அறி­வு­றுத்­தல்கள் வழங்­கி­யுள்ளேன் என்று அறி­வித்­துள்­ளமை தொடர்பில் எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன் கருத்து வௌியி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இவ்­வி­டயம் சம்­பந்­த­மாக அவர் மேலும் தெரி­விக்­கையில், தற்­போது பிணை­மு­றிகள் விடயம் சம்­பந்­த­மாக விசா­ரணை செய்த ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வா­னது தனது பரிந்­து­ரை­களை ஜனா­தி­ப­தி­யி­டத்தில் பாரப்­ப­டுத்­தி­யுள்­ளது. இது தொடர்­பாக ஜனா­தி­ப­தியும் தனது நிலைப்­பாட்­டினை பகி­ரங்­க­மாக அறி­வித்­துள்ளார். 

ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­க­ளுக்கு அமை­வாக நட­வ­டிக்­கை­களை அடுத்த கட்­ட­மாக எடுக்­க­வேண்டும். ஊரிய அதி­கார பீடங்­க­ளுக்கு அவை அனுப்­பப்­பட்டு தம­த­மின்றி துரி­த­மான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வேண்டும். அவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டும்­போது நாம் மேற்­பார்­வை­யா­ளர்­க­ளாக இருப்போம். நீதி நிலை­நாட்­டப்­பட வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும். இந்த நாட்டில் பொதுச்­சொத்­துக்கள் முறை­யற்ற வகையில் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்­டுள்­ளன. 

நாட்டின் பொதுச்­சொத்­துக்­களை துஷ்­பி­ர­யோ­க­மாக பயன்­ப­டு்­த­வ­தற்கு எவ்­வி­த­மான அங்­கீ­கா­ரமும் யாருக்கும் கிடை­யாது. கடந்த காலங்­களில் இவ்­வி­த­மான விட­யங்கள் பல இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. அதே­போன்று தான் ஊழல் மோச­டிகள் தொடர்­பான விட­யங்­களும் நடை­பெற்­றுள்­ளன. 

இவ்­வி­த­மான செயற்­பா­டுகள் அனைத்தும் எதிரான நிலைப்பாட்டினையே நாம் கொண்டிருக்கின்றோம். கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ள பொதுச் சொத்து துஷ்பிரயோகங்கள், ஊழல்மோசடிகள் உள்ளிட்ட அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். அவை பகிரங்க ப்படுத்தப்பட்டு சட்டத்தின் முன் பாரப்படுத்தப்பட வேண்டும். நாம் எப்போதும் உண்மையின் பக்கமே இருப்போம் என்றார்.