வெலிக்கடைச் சிறைப் படுகொலை; ஆதாரங்கள் வெளியாகின !
வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் போது 27 கைதிகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நிறைவு செய்யப்பட்டு, அறிக்கை சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட சாட்சிக ளின் பிரகாரம் சிறையில் இருந்து கல வரத்தின் இடை நடுவே முச்சக்கர வண்டியில் தப்பியோடும் போது பொலிஸ் விஷேட அதிரடிப் படையி னரால் 8 பேரும், பொலிஸ் விஷேட அதிரடிப்படை மீது தாக்குதல் நடத்து ம் போது பதில் தாக்குதலில் இருவரும் கொல்லப்பட்டதாவும்,
கலகம் அடக்கப்பட்ட பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டு எட்டுபேர் கொல்லப்பட்டு ள்ளதாகவும் குற்றப் புலனயவுப் பிரிவு கொழும்பு மேலதிக நீதிவான் ரங்க திஸாநாயக்கவுக்கு அறிவித்தது.
வெலிக்கடை விவகாரம் தொடர்பில் விசார ணைகளை முன்னெடுக்கும் விஷேட பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரி சோதகர் கரசிங்ஹ இதனை நீதிவானுக்கு நேற்றைய தினம் தெரிவித்தார்.
இந் நிலையில் சட்ட மா அதிபரின் அலஓசனை பிரகாரம் நீதிமன்றில் முன்னி லைப்படுத்தப்பட்ட இவ் விவகாரத்தில் தொடர்புபட்ட ரீ 56 ரக துப்பாக்கிகள் 156, எம்.எம். ரக ரிவோல்வர்கள் 5 உள்ளிட்ட 161 துப்பாக்கிகளையும் அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்ப நீதிவான் ரங்க திஸாநாயக்க உத்தர விட்டார்.
நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் கரசிங்ஹ நீதிவானுக்கு சமர்ப்பித்த மேலதிக விசாரணை அறி க்கையின் பிரகாரம், வெலிக்கடை சிறைச்சாலையில் போதைப் பொருள், கையடக்கத் தொலைபேசி மற்றும் வேறு சட்ட விரோதப் பொருட்களை கைப்ப ற்றும் நோக்குடன் பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் ஒத்துழைப்புடன் சிறைப்பாதுகாப்பு அதிகாரிகளால் 2012.11.9 ஆம் திகதி விஷேட சோதனை ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.
இதன்போது கைதிகள் குழம்பியுள்ள நிலையில், நாளாந்த நடவடிக்கைகளு க்காக ஆயுதங்கங்களை விநியோகம் செய்யும் சிறை ஆயுத களஞ்சியத்தை அவர்கள் சூறையாடி அதில் இருந்த ஆயுதங்களைக் கொண்டு பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மீது தாக்குதல்களை நடாத்தியுள்ளனர்.
இவ்வேளை பெரும் கலவரமாக மாறியுள்ளது. அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாமல் போயுள்ளது.
இந் நிலையிலேயே கலகத்தின் இடை நடுவே கைதிகள் தப்பிச் செல்வதை தடுக்க வெலிக்கடை சிறைச்சாலையை பொலிஸ் விஷேட அதிரடிப் படை சுற்றி வளைத்துள்ளது.
இதன்போது 2009 நவம்பர் 9 ஆம் திகதி இரவு 12.00 மணியளவில் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடாத்திவிட்டு, சிறை அத்தி யட்சரின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள பகுதியூடாக தப்பிச்செல்ல சிலர் முயன்றுள்ளனர்.
இதன்போது அதிரடிப் படை நடாத்திய பதில் தாக்குதலில் இருவர் காயமடை ந்து அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ள னர்.
இதன்போது முச்சக்கர வண்டியொன்றில் தப்பிச் சென்ற கைதிகள் மீது அதிரடிப்படை நடாத்திய துப்பாககிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சாட்சியங்களின் பிரகாரம், இந்த சிறைக் கலவரமானது இராணுவமும் தலை யீடு செய்த பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பின்னர் தெரிவாகிய 8 கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
மாலன் எனப்படும் மலிந்த நிலேத்திர பெல்பொல, நிர்மல அத்த பத்து, மொஹ மட் விஜேரோஹன, களு துஷார எனப்படும் துஷார சந்தன, அசரப்புலிகே ஜோதிபால, ஹர்ஷ சி.மணிகீர்த்தி பெரேரா, சுசந்த பெரேரா, கொண்ட அமில எனப்படும் மலித் சமீர பெரேரா ஆகிய எட்டுபேருமே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக சாட்சிகள் தெரிவித்தன.
சிறைக் கலவரம் அடக்கப்பட்ட பின்னர் அங்கு சிறைக்கு வந்ததாக கூறப்படும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பணியகத்தின் பொலிஸ் பரிசோதகர் ரங்கஜீவ மற்றும் மேலும் இருவர் இந்த கைதிகளை தெரிவு செய்ததாக சாட்சி கள் தெரிவித்தன.
என குற்றப் புலனாய்வுப் பிரிவு மன்றுக்கு சமர்பித்த அறிக்கையில் சுட்டிக்கா ட்டப்பட்டுள்ளது.
இந் நிலையிலேயே சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடை க்கும் வரை மன்றில் சமர்பிக்கப்பட்ட ஆயுதங்களை அரச இரசாயன பகுப்பா ய்வுக்கு உட்படுத்த உத்தரவிட்ட நீதிவான் ரங்க திஸாநாயக்க, இது தொட ர்பிலான மேலதிக விசாரணைகளை எதிர்வரும் மே மாதம் மீள விசாரணை க்கு எடுக்க உத்தர விட்டார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சிறைக் கலவரத்தின் போது 27 பேர் மொத்தமாக உயிரிழந்த நிலையில் அவர்களின் பெயர் பட்டி யலை அப்போதைய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்திய ட்சர் பிரசாந்த ஜயகொடி வெளிப்படுத்தியிருந்தார்.
இது தொடர்பிலேயே தற்போது குற்றப் புலனயவுப் பிரிவு விஷேட விசாரணை களை ஆரம்பித்து அதனை நிறைவு செய்துள்ளனர்.