Breaking News

ரயிலில் மோதுண்ட இளம் குடும்பப்பெண் பலி - வெள்ளவத்தை

வெள்ளவத்தை பகுதியில் ரயிலில் மோதி இளம் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். .

இவ் விபத்து நேற்று இடம்பெற்றுள்ள துடன் வவுனியா, தாண்டிக்குளம் பகு தியை சேர்ந்த 35 வயதுடைய கமலவ தனா (கமலி) என்ற குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார். 

கொழும்பு வெள்ளவத்தை ரயில் நிலையத்தில் நேற்றுக் காலை தனது ஆறு வயதுடைய மகனுடன் ரயிலிலி ருந்து மற்றுமொரு ரயிற்கு மாறும் போதே குறித்த விபத்து ஏற்பட்டதாக தெரி விக்கப்படுகின்றது. சம்பவத்தில் மகன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் முன்னெடுத்த வண்ணமுள்ளனா்.