பாராளுமன்றில் இன்று முக்கிய அறிக்கைகள் சமர்ப்பிப்பு.!
மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் பற்றி விசாரித்த ஆணைக்குழுவின் அறி க்கையும், பாரதூரமான ஊழல் மோசடிகள் பற்றி விசாரித்த ஜனாதிபதி ஆணை க்குழுவின் அறிக்கையும் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இது தொடர்பாக சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று பாராளுமன்ற கட்ட டத்தொகுதியில் நடத்தப்பட்ட விசேட கட்சி த்தலைவர் கூட்டமொன்றில் தீர்மானமாகி யது. பிணைமுறி அறிக்கை தொடர்பில் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் விவாதம் ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இன்று கூடும் கட்சி தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது. மத்திய வங்கியின் பிணை முறி விசாரணை அறிக்கை வழங்கப்பட்ட பின்னர் பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இவ் விடயம் தொடர்பில் சபா நாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக இது தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நட த்துவது தொடர்பாகவும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் இதன்போது பேச்சுவார்த்தை நடத்தப்படுமென சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக இது தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நட த்துவது தொடர்பாகவும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் இதன்போது பேச்சுவார்த்தை நடத்தப்படுமென சபாநாயகர் தெரிவித்துள்ளார்.