தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகிறது!
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றைய தினம் ஆரம்பம். இதனைத் தொட ர்ந்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான பொதுமக்கள் வாக்களிப்பு இடம்பெ றும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இம்முறை தபால் மூலம் வாக்களிப்ப தற்காக சுமார் 5 இலட்சத்து 60 ஆயிரம் பேர் தகுதி பெற்றவர்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொலிஸ் அதிகாரிகள், தேர்தல் அலுவலக மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலக அதிகாரிகளுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று இட ம்பெறுமென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முஹம்மட் தெரிவி த்துள்ளார்.