"2020 வரை நல்லாட்சி தொடருமாம்'' - ராஜித்த சேனாரட்ன !
மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் 2008 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை மத்திய வங்கியில் இடம்பெற்ற தாகக் கூறப்படும் 4000 பில்லியன் ரூபா மோசடி குறித்து உரிய விசார ணை நடத்தப்படுமென அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவி த்தார். அரசாங்க தகவல் திணைக்கள த்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சரவை பேச்சாளர் ராஜித்த சேனாரட்ன மேலும் தெரிவிக்கையில்
கேள்வி:
- மத்தியவங்கி விசாரணை அறிக்கை எப்படி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பி க்கப்டுவதற்கு முன்னர் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாய க்கவிற்கு சமர்ப்பிக்கலாம்.?
பதில்:
- அவர் தகவலறியும் சட்டமூலத்தைப் பயன்படுத்தி அதைப் பெற்றிருக்க லாம். தற்போது பாராளுமன்றத்திற்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிப தியின் அறிக்கையின் பிரதிகளை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் மத்திய வங்கிக்கும் அனுப்பியிருந்தார்.
ஆனால் பிரதமர் முதலில் அமைச்சரவைக்கு அனுப்புமாறு கேட்டிருந்தார்.
அதன் பின்னர் பாராளுமன்றத்திற்கும் வழங்கவேண்டுமென கூறியிருந்தார். ஆனால் தற்போது முன்னாள் நிதி அமைச்சர் அறிக்கையில் தனது பெயர் இல்லையெனக் கூறுகிறார். அவரது பெயர் அறிக்கையில் இல்லாவிடின் ஜனா திபதி வெறுமனே கூறுவாரா? ஜனாதிபதி அதிலுள்ள விடயங்களையே தெரி வித்தார்.
கேள்வி:
- எவ்வளவு காலத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்யும்?
பதில்:
- (தயாசிறி) சட்டமா அதிபர் திணைக்களம் இந்த அறிக்கையை ஆராய்ந்து வருகிறது. எனவே விரைவில் தேவையான நடவடிக்கைகள் எடுத்து வழக்கு தாக்கல் செய்யும்.
கேள்வி:
- ஆறுமாதங்கள் ஆகுமா?
- இல்லை இல்லை ஒருமாதத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம். பதில் (ராஜித) 2008, 2014 காலத்தில் இடம்பெற்ற 4000 பில்லியன் ரூபா மோசடி தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படும். நீங்கள் இதில் அவசரப்படா தீர்கள். நாங்கள் தேவையான நடவடிக்கை எடுப்போம். ஊடகங்கள் இந்த 4000 பில்லியனை விட்டுவிட்டு 11 பில்லியன் குறித்தே பேசிக்கொண்டிரு க்கின்றனர்.