ஐந்தா ? ஆறா ? என்று ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்படும் !.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வின் பதவிக் காலம் ஐந்து வருட ங்களா அல்லது ஆறு வருடங்களா என்பது தொடர்பில் ஆராய நியமிக்க ப்பட்ட ஐந்து நீதியரசர்கள் அடங்கிய குழு இன்று பகிரங்க நீதிமன்றத்தில் கூடி ஆராய்ந்துள்ள நிலையில், தமது தீர்மானம் தொடர்பாக ஜனாதிபதிக்கு தெரிவிப்பதாக அக் குழு தெரிவித்து ள்ளது. தனது பதவிக்காலம் தொடர்பில் ஜனாதிபதி உயர் நீதிமன்றில் விள க்கம் கோரியிருந்த நிலையில், அந்த விளக்கம் விரைவில் ஜனாதிபதிக்கு அனு ப்பி வைக்கப்படவுள்ளது.
அரசியலமைப்பின்படி முன்னர் ஜனாதிபதியின் பத விக்காலம் 6 வருடங்களாக இருந்தன. எனினும், புதிய சட்டத்தின் படி அது ஐந்து வருடங்களாக குறைக்கப்பட்டது.