பிணைமுறி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கான மனோ ஆலோசனை!
“பிணைமுறி விவகாரத்தில் திருட ர்கள் எவராக இருந்தாலும், அவர்க ளது உள்ளாடைகளை மட்டும் விட்டு விட்டு ஏனைய அனைத்தையும் அரசு டைமையாக்கி விட்டு, அவர்களை சிறையில் அடைக்க வேண்டும்.” என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் தேசிய கலந்துரையாட ல்கள் அமைச்சருமான மனோ கணே சன் ஆலோசனை வழங்கியுள்ளார். “பிணை முறி திருடர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அரசாங்கத்திலிருந்து வெளியேறி போராட வேண்டுமெ ன்றால், அதற்கு தயங்க மாட்டேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகும் “ஹாட்டோக்’ எனும் நிக ழ்வில் பங்கேற்ற அமைச்சர் மனோ கணேசனிடம் பிணைமுறி விவகாரம் தொடர்பில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை தொடர்புபடுத்தி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணியில் இருக்கும் மனோ கணேசன் எதி ர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைவாரா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, “ஏன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மட்டும் சொல்கின்றீர்கள்?
எதிர்காலத்தில் ஜே.வி.பி.யுடன் இணைய வேண்டிய சூழ்நிலை உருவானாலும் அதைச் செய்வோம். பிரதான எதிர்க்கட்சிக்குரிய செயற்பாட்டை அக்கட்சியே முன்னெடுத்துள்ளது ” எனத் தெரிவித்துள்ளார்.