Breaking News

புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வரலாற்றை படிக்க வேண்டுமென்கிறார் சுரேஸ்

அண்மையில் கூட்டமைப்பினர்
வரவுசெலவுத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்காக 2கோடி பெற்றுக்கொண்டதாக பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் சாள்ஸ் ஆகியோர் சுரேஸ் பிரேமச்சந்திரனும் மகிந்த ஆட்சிக்காலத்தில் வரவுசெலவுத்திட்டத்திற்கு ஆதரவளித்ததாக பதிலுக்கு பிரச்சார கூட்டமொன்றில் தெரிவித்திருந்தனர்.

இதற்கு பதிலளித்த சுரேஸ் பிரேமச்சந்திரன் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வரலாறுகளை படிக்க வேண்டும் அதனை படித்துவிட்டு பேசவேண்டும் என்றும் பாராளுமன்ற பதிவேடான கன்சாட்டை பார்க்குமாறும் தாம் ஒருபோதும் வரவுசெலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.



தொடர்புடைய முன்னைய செய்தி


2 கோடி பெற்றுக்கொண்டது உண்மையே சிறீதரன் முன்னிலையில் சம்பந்தன்(காணொளி)

2 கோடி பெற்றது உண்மையே சரா,சாந்தி,சித்தார்த்தன்(காணொளி)

அரசிடம் 2கோடி பெறவில்லையென ஒருவர் கூறமுடியுமா?-சவால் விடுகிறார் ஆனந்தன்