நயினாதீவில் சிங்கள மாவத்தை-நல்(ரி) ஆட்சி(படங்கள்)
யாழ்ப்பாணம் நயினாதீவில் சிங்கள
கிராமங்கள் திட்டமிட்டு உருவாக்கப்படும் செயற்பாடு தொடர்ந்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கிராமங்கள் திட்டமிட்டு உருவாக்கப்படும் செயற்பாடு தொடர்ந்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நயினாதீவு பகுதியில் வாழும் தமிழர்கள் வியாபாரம் மற்றும் கல்வி நோக்கில் யாழ்நகரை நோக்கி இடம்பெயர்வதால் அங்குள்ள தமிழர்களின் காணிகளை அங்குள்ள பிக்கு ஒருவரூடாக சிங்களவர்கள் வாங்கி வருவதாகவும் அதன் காரணமாக அங்கு சிங்கள குடும்பங்களை குடியேற்றி வருவதாகவும் தெரியவருகின்றது.
இவ்வாறு குடியேற்றப்படும் மக்கள் தாங்கள் வாங்கிய காணிகளை அண்டிய ஒழுங்கைகளுக்கு சிங்கள பெயர்களில் மாவத்தைகளை உருவாக்கிவருவதும் அதனை தமிழ் அரசியல்வாதிகள் கண்டும் காணாமலும் இருந்துவருவது வேதனைக்குரியது.
அங்கு வாழும் தமிழர்கள் குறுகியகால நிதித் தேவைக்காக காணிகளை விற்பனை செய்துவருவதும் அதனை பயன்படுத்தி பெரும்பான்மை இனத்தவர்கள் தாயகப்பகுதியை ஆக்கிரமிப்பதும் தொடர்ந்து வருவதாகவும் நாமே அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அதற்காக மக்களை தெளிவூட்ட வேண்டிய அரசியல்வாதிகள் வாக்குபெறுவதில் மாத்திரமே அக்கறைப்படுவதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை குறிப்பிட்ட அந்த பிக்கு அப்பிரதேச மக்களது குடும்ப விபரங்கள் முதல் சகல தவல்களும் கைவசம் வைத்திருப்பதாகவும் அதனைக்கொண்டே அவர் தனது நோக்கை 0இலகுவாக நகர்த்தி வருவதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை குறிப்பிட்ட அந்த பிக்கு அப்பிரதேச மக்களது குடும்ப விபரங்கள் முதல் சகல தவல்களும் கைவசம் வைத்திருப்பதாகவும் அதனைக்கொண்டே அவர் தனது நோக்கை 0இலகுவாக நகர்த்தி வருவதாகவும் தெரியவருகின்றது.