யாழ் சுதந்திரக்கட்சி அலுவலகத்தில் புலிகளின் புரட்சி பாடல்(காணொளி)
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டில் “நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா” என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடல் ஒலிபரப்பபட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு இன்று (12) காலை யாழ் நகரிலுள்ள “பிள்ளையார் இன்” விருந்தினர் தங்ககத்தில் நடைபெற்றது. அங்கு நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்பதாக ஒலிபெருக்கியில் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.
அதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடலான “நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா” என்ற எழுச்சிப்பாடல் ஒலிபரப்பப்பட்டது. இலங்கை அரசாங்கத்தையும் இராணுவத்தையும் கடுமையாக விமர்சிக்கும் வரிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முழுமையான பாடல்