Breaking News

வவுனியா பஸ் நிலைய சிக்கல் உண்மையாக யாருக்கு பாதிப்பு(காணொளி)

வடபிராந்திய போக்குவரத்துச் சபை ஊழியர்களின்
கோரிக்கைகளுக்கு  முதலமைச்சர் செவிமடுக்காவிடின் அவர்கள் தமது உச்சக்கட்ட ஆத்திரத்தால் வடக்கு மாகாண முதலமைச்சரின் கொடும்பாவியை எரிப்பார்கள். அதற்கு வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற் சங்கம் பொறுப்புக் கூறாது.

இவ்வாறு ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் செயலாளர் அ.அருட்பிராகசம் தெரிவித்துள்ளார்.


முதலமைச்சருக்கு எதிரான போராட்டம் மேலும் வெடிக்கும் என்றும் எதிர்வரும் தேர்தல் காலத்தில் முதலமைச்சருக்கு எதிரான தீர்ப்பை மக்கள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சருக்கு எதிரான எமது போராட்டம் எப்படி முதலமைச்சருக்கு எதிராக நடாத்தப்படுகிறது என ஊடகங்களால் சொல்லமுடியும் எனவும் குழப்பகரமாக பேசி நேற்றைய சந்திப்பில் இந்த போராட்டத்தின் பின்னணியில் கூட்டமைப்பு இருப்பதையும் ஒத்துக்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று காலை நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.



வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
"வடபிராந்திய போக்குவரத்துச் சபையில் பணியாற்றும் ஒவ்வொரு பிரிவு தொழிற்சங்கங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை ஒன்றிணைத்ததே எமது சங்கம். நாம் பதிவு செயவதற்கான முயற்சிகளை எடுத்துவருகின்றோம் எனவும் தெரிவித்திருந்தார்.


உண்மையாக வவுனியா மக்கள் சிரமப்படுகின்றார்களா என்பதை மக்கள்தான் தங்கள் போராட்டங்கள் மூலமாகவோ சந்திப்புக்கள் மூலமாகவோ வெளிப்படுத்த வேண்டுமே தவிர இதில் இ.போ.சபை ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்பதோடு இந்த பஸ்நிலைய மாற்றத்தால் வவுனியாவுக்கு வரும் பயணிகள் பழைய பஸ் நிலையத்தைவிட மிக விரைவாக வைத்தியசாலை,பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் என்பவற்றை புதிய பஸ் நிலையத்திலிருந்து வந்தடைய முடியும் என்பதை வரைபடங்கள் மூலம் தமிழ் கிங்டொம் சுட்டிக்காட்டுகின்றது.



ஏற்கனவே போக்குவரத்து அமைச்சராக இருந்த பா.டெனீஸ்வரன் மற்றும் தமிழரசுக்கட்சியை சேர்ந்த சத்தியலிங்கம் ஆகியோர் அமைச்சு பதவியிலிருந்து முதலமைச்சரை நீக்கியிருந்த நிலையில் அதற்கு பழிதீர்க்கும் படலமாகவே இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய பஸ்நிலையம் திறக்கப்பட்டதால் பழைய பஸ் நிலையத்திலுள்ள வர்த்தகர்கள் பாதிக்கப்படுவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது அதனை நிகவர்த்தி செய்வதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்வதற்கு பதிலாக வர்த்தகர்களை தூண்டி முதலமைச்சரை ஒரங்கட்டும் செயலாகவே இது இது பார்க்கப்படுகிறது.






இது தொடர்பான முகநூல் பதிவு

//வவுனியாவின் புதிய பஸ் நிலையம் பற்றிய சில தெளிவுபடுத்தல்களைச் செய்ய விரும்புகிறேன்..
வவுனியாவின் அரச அதிபராக திரு சண்முகம் அவர்கள் கடமையாற்றிய காலத்தில் நகர விரிவாக்கற் திட்டமொன்று தயாரிக்கப்பட்டது, அதன்படி
1.யாழ் வீதியில் உள்ள அரச விதை உற்பத்திப் பண்ணையானது, அதிக நிலப்பரப்பு உள்ள மற்றொரு பொருத்தமான இடத்திற்கு மாற்றப்படல். (இதற்காக புளியங்குளத்தில் 200 ஏக்கர் நிலம் பின்னர் ஒதுக்கப்பட்டது)
2.அந்த இடத்தில் அரசு திணைக்களங்கள்(கச்சேரி உட்பட) அமைக்கப்படல்.
3. வவுனியா வைத்தியசாலை விரிவாக்கத்திற்கு தற்பொழுது கச்சேரி அமைந்துள்ள இடத்தைக் கொடுத்தல்.
4. உள்வட்ட வீதியில் அமைந்துள்ள அரசு ஊழியர் விடுதிகள் அனைத்தும் பூந்தோட்டத்தில் முன்பு நலன்புரி நிலையம் அமைந்துள்ள இடத்திற்கு மாற்றப்படல்.
5. உள்வட்ட வீதியில் உள்ள கட்டடங்கள் அகற்றப்பட்டு, புகையிரத நிலையம் வரை அரசு தனியார் பஸ் நிலையங்களும் தங்கும் விடுதிகளும் அமைக்கப்படல்.
இந்தத் திட்டம் அப்போது நிதிப்பற்றாக்குறையால் பிற்போடப்பட்டது.
கடந்த ஆட்சியில் பஸ் நிலையத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டபோது, உள்வட்ட வீதியில் இருக்கும் விடுதிகள் உடன் அகற்றப்பட இயலாத நிலையில் தற்போதைய இடம் தெரிவு செய்யப்பட்டது.
இந்தத் தெரிவு கடந்த அரசாங்கத்தின் தன்னிச்சையான முடிவென்று கூறப்பட்டாலும், அப்போது எந்தவொரு அமைப்பும் சிறு எதிர்ப்பையும் பதிவு செய்திருக்கவில்லை.
தற்போது தனிப்பட்ட காரணங்களால் பலர் எதிர்ப்புத் தெரிவிப்பதுடன் தவறான கருத்துக்கள் பலவும் உலவுகின்றன.
1.புதிய பஸ் நிலையம் தாண்டிக்குளத்தில் இல்லை, அது யாழ் வீதியில் குடியிருப்பு எல்லைக்குள் அமைந்துள்ளது.
2.நகரத்தில் இருந்து தொலைவில் அமைந்துள்ளதாக் கூறப்பட்டாலும்,
வவுனியாவின் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பிரதேச செயலகம் - 1.2 km
கச்சேரி - 1.1 km
பொது வைத்தியசாலை - 950m
நீதிமன்றம் - 650m
பொதுச் சந்தை - 1km
புதிய பஸ் நிலையத்தில் இருந்து
பிரதேச செயலகம் - 400m
கச்சேரி - 400m
பொது வைத்தியசாலை - 650m
நீதிமன்றம் - 800m
பொதுச் சந்தை - 1km
3.புதிய பழைய பஸ் நிலையங்தளிடையே தொடர்ந்து இலவச இடைச்சேவைகள் உள்ளன, அதைவிட பெரும்பாலான தூரச்சேவைப் பேருந்துகள் நகரை ஒருமுறை வலம் வந்தபின்னர்தான் புறப்படுகின்றன/ பஸ் நிலையம் சேர்கின்றன.
20 கோடி செலவில் கட்டப்பட்ட பின்னர் இதை ஒரு வருடமாகப் பூட்டி வைத்திருந்ததே நகைச்சுவை.
பழைய பஸ் நிலையத்தில் நிலவும் நெரிசலும் அதனால் காலையில் ஏற்படும் வாகன நெரிசலும் அனைவரும் அறிந்ததே.
வவுனியா நகரம், சிறு வட்டத்திற்குள் இன்னும் நெரிந்து பிதுங்காமல், விரிவடைந்து வளரவேண்டும்.
30 ஆண்டுகளுக்கு முன்னர், பசார் வீதியில் இருந்த பஸ் நிலையம் தற்போதுள்ள இடத்தில் மாற்றப்பட்டால்தான், இலுப்பையடியும் பசார் வீதியும்தான் நகரம் என்ற நிலை மாறி முதலாம், இரண்டாம் குறுக்குத் தெருக்கள், மூன்று முறிப்பு வரை நகரம் விரிவடைந்து செல்லக்கூடியதாக இருந்தது.
அதே போன்ற ஒருதேவையே தற்போதும் எழுந்துள்ளது. நீண்ட கால நோக்கில் இதை அணுகவேண்டியது கட்டாயம்...//
Via Mathurahan Selvarajah