பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர - எச்சரிக்கை !
குற்றப் புலனாய்வுப் பிரிவு (சி.ஐ.டி), நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு ( எப்.சி. ஐ.டி.), விசேட விசாரணைப் பிரிவு ( எஸ்.ஐ.யூ.), கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு ( சி.சி.டி.), கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவு (சி.எப்.பி.) போன்ற விசேட விசாரணைப் பிரிவு கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் அனைத்தும் வெளிப்படைத் தன்மையுடன் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லப்படுவதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். அதேபோன்று போதை ப்பொருள் தடுப்புப் பிரிவு, திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் சிறப்புப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் ஊடாகவும் மாவட்ட, மாகாண மட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமெனத் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் ஒன்றிணைந்து செயற்படுவதாலேயே சிறந்த அடைவு மட்டங்களை பெற முடிவதாகவும் எவரும் வெவ்வேறு தேவைகளுக்காக தனித்து இய ங்க முயற்சிக்க வேண்டாமென பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை விடுத்து ள்ளார்.
அத்துடன் சமூகத்திலுள்ள கெட்டவர்களை வெளிப்படுத்துவது போன்றே பொலிஸாருக்குள் ஒளிந்திருக்கும் கெட்டவர்களையும் வெளிப்படுத்தி பொலி ஸார் தமது தூய்மையான பயணத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமெ னத் தெரிவித்துள்ளாா்.
புத்தாண்டில் பொலிஸாரின் கடமைகளை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தும் அரச பணியாளர்களின் இவ்வருட பிரகடனத்தை ஏற்கும் பொலிஸ் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற விசேட நிக்ழ்வில் கலந்துகொண்டு பேசும் போதே பொலிஸ் மா அதிபர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது, பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்ததாவது, யுத்தம் நிறைவுக்கு வந்தபின்னர் பொது மக்கள் சுதந்திரமான சூழலை எதிர்பார்க்கின்றனர். அந்த சுதந்திர சூழலை ஏற்படுத்தும் பொறுப்பு பொலிஸாராகிய எம்கைகளில் உள்ளது. கடந்த வருடத்தில் எமக்கு பாரிய சவால்கள் இருந்தன.
குறிப்பாக போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் எமக்கு சவால் இருந்தது. போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையையும் ஒன்றிணைத்து நாம் திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவை ஏற்படுத்தி அதனூடாக வெற்றிகரமாக அந்நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கிறோம்.
இதனூடாக போதைப்பொருள் ஒழிப்புக்காக எமக்கு 50 மில்லியன் ரூபா கிடை த்தது. அந்நிதியை நாம் உரிய முறையில் பயன்படுத்தியுள்ளோம்.
குற்றப் புலனாய்வுப் பிரிவு (சி.ஐ.டி), நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு ( எப்.சி. ஐ.டி.), விசேட விசாரணைப் பிரிவு ( எஸ்.ஐ.யூ.), கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு ( சி.சி.டி.), கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவு (சி.எப்.பி.) போன்ற விசேட விசாரணைப் பிரிவுகள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ள அனைத்து விசாரணைகளும் வெளிப்படைத்தன்மையுடன் தொடர்ந்தும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த விசாரணைகள் தொடர்பில் நாம் தேவையான விசேட நிபுணர்களின் உதவியைப் பெற்றுள்ளோம். சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம்.
அதேபோன்று, மேல் மாகாணத்தை பொறுத்தவரை நாம் குற்றத் தடுப்பு, விசாரணையில் பாரிய வெற்றிகளைக் கண்டிருக்கின்றோம்.
இவை அனைத்தும் பொலிஸார் ஒன்றிணைந்து செயற்பட்டமைக்கு கிடைத்த பெறு பேறுகளாகும்.
கடந்த நாட்களில் ஒவ்வொரு பிரிவினரும் தனித்து வெவ்வேறு திசைகளில் செல்வதாக தகவல்கள் கிடைத்தன. எந்த ஒரு பிரிவும் தனி த்து இயங்க வேண்டாம்.
அனைவரும் பொது நோக்குடன் இலங்கை பொலிஸார் என்ற ரீதியில் செயற்பட வேண்டும்.
அத்துடன் இவ்வருடம் பிரஜா பொலிஸ்பிரிவுகளை மேலும் வலுப்படுத்த வேண் டும் கடந்த வருடம் இதற்கான அடித்தளம் இடப்பட்டது.
இன்னும் அந்த பிரஜா பொலிஸ் நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும். பொது மக்களுக்கும் எமக்குமான உறவு வலுப்படும் போதே உளவுத் தகவல் கள் எமக்கு மென்மேலும் கிடைக்கும். எனவே அதற்காக பிரஜா பொலிஸ் திட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டு மெனத் தெரிவித்துள்ளார்.