வரலாற்றுச் சிறப்புமிக்க மேம்பாலம் ஜனாதிபதி, பிரதமரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வரலாற்று சிறப்புமிக்க 534 மீற்றர் நீளமுடைய இராஜகிரிய சந்தியில் நிர்மாணி க்கப்பட்ட மேம்பாலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரால் இன்று காலை மக்கள் பாவனைக்காக உத்தியோ கபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
நீண்ட காலமாக பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் இரா ஜகிரிய பிரதேசத்தில் காணப்படும் வாகன நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் இராஜகிரிய சந்தியில் குறித்த பாலம் நிர்மாணிக்கப்பட்டு வந்த நிலையில் குறித்த மேம்பாலம் இன்று காலை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த பாலத்தின் நிர்மாணப்பணிகள் இவ்வருட இறுதியிலேயே நிறைவு செய்ய திட்டமிடப்பட்டிருந்த போதிலும் பொது மக்க ளின் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு அதன் நிர்மாணப்பணிகளை 11 மாதங்களுக்கு முன்னரே நிறைவு செய்ய ஜனாதிபதி ஆலோசனை வழங்கி யுள்ளார்.
ஸ்பெயின் நாட்டு நிறுவனமும் உள்நாட்டு நிறுவனமும் இணைந்து 2016 இல் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட இந்த மேம்பாலத்திற்கான மொத்த செலவு 4,700 மில்லியன் ரூபாய்களாகும்.
நான்கு வாகன ஓடுபாதைகளை கொண்டுள்ள இந்த மேம்பாலத்தின் நீளம் 534 மீற்றர்களாக காணப்படுவதுடன் 150 மீற்றர் நீளமுடைய பிரவேச மார்க்கத்தை யும் கொண்டதாக அமைந்துள்ளது.
இதனுடன் இணைந்ததாக இதனைச் சூழவுள்ள பல வீதிகளும் அபிவிருத்தி செய்யப்படுவதுடன் நாராஹேன்பிட்டி நோக்கிப் பயணிப்பதற்கான மாற்று வழிப்பாதையும், புத்கமுவ நோக்கி பயணிப்பதற்கான மூன்று வாகன ஓடு பாதைகளைக் கொண்ட வீதியும் இதனூடாக அபிவிருத்தி செய்யப்படுகி ன்றன.
உயர் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பொறியியல் நியமங்களுக்கு அமைவாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலம் இரும்பின்மீது கொங்றீட் பரவி இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது மேம்பாலமாகவும் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மிக அலங்காரமான மேம்பாலமாகவும் வரலாற்றில் சிறப்புமிக்கதாகும்.
நாளொன்றிக்கு ஒரு இலட்சத்துக்கும் அதிக எண்ணிக்கையான வாகனங்கள் பயணிக்கும் இராஜகிரிய சந்தி நாட்டில் அதிக வாகன நெருக்கடி காணப்படும் சக்தியாகவும் கருதப்படுகிறது.
இவ்வாறு அதிக வாகன நெருக்கடி காணப்படும் சந்தர்ப்பங்களில் அப்பாதை யினூடாக பயணிக்கும் வாகனங்களின் வேகம் மணிக்கு இரண்டு கிலோ மீற்ற ர்கள் அளவில் மிக குறைவாக காணப்படுவதுடன் இந்த மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் இராஜகிரிய பிரதேசத்தை சுற்றியுள்ள பாதைகளில் காணப்படும் அதிக வாகன நெருக்கடி இல்லாது போவதனூடாக வாகனங்க ளின் வேகம் தற்போதைய வேகத்தைப் போல் 8 மடங்காக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேண்தகு அபிவிருத்தியின் பயன்களை நாட்டுக்கு பெற்றுக்கொடுத்து, ஜனா திபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் தற்போதைய அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்களுள் வீதி அபிவிருத்தியுடன் இணைந்ததாக இடம்பெறும் மேலும் ஒரு விசேட செய ற்திட்டமாகவும் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக முன்னெ டுக்கப்படும் செயற்திட்டத்தின் விசேட திட்டமாகும்.