Breaking News

ஊடகங்கள் மீது குற்றச்சாட்டு – சுமந்திரன்

இடைக்கால அறிக்கை விடயத்தில் ஊடகங்கள் பொய் உரைப்பதில் அரசி யல்வாதிகளை விடவும் மோசமானவர்களாக ஊடகங்கள் மாறியுள்ளன.

அரசியல்வாதிகள் மக்களை கவருவ தற்காக பொய்களை சொல்கிறார்கள். அதேபோல் ஊடகங்கள் பணத்திற்காக மோசமான பொய்யை சொல்லிக் கொண்டிருக்கின்றன. நாங்கள் கூறும் உண்மைகளை மக்களிடம் எடுத்து செல்லும் பணியை கூட ஊடகங்கள் சரியாக செய்வதில்லையென நாடா ளுமன்ற உறுப்பினர் எ.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். பருத்துறை பகு தியில் நேற்று உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டம் இடம்பெற்றபோது இப்பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில்......

கூட்டமைப்பு தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷைகளை விட்டுக் கொடு க்காமல் வேறு சில விடயங்களில் விட்டுக் கொடுப்புக்களை செய்து வருகி ன்றது. அது தவறு என விமர்சிப்பவர்கள் தமிழர்களின் நீண்டகால அபிலாஷை களை பெற்றுக் கொடுப்பதற்கு என்ன வழி என்பதை தெரிவிக்க வேண்டும். 

தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதங்களை ஏந்தவேண்டுமா? 

என அவர் கேள்வி எழுப்பிருக்கிறார். ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க சொன்னவர்கள் இப்போது மீண்டும் வந்து நாங்கள் எல்லாவற்றையும் செய்து கொடுப்போம் என சொல்கிறார்கள். எப்படி பெற்று கொடுக்கபோகிறீர்கள்? 

என கேட்டால் அதற்கு அவர்களிடம் பதில் இல்லை. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் சில விடயங்களில் நாங்கள் இணங்கியிருக்கிறோம். குறி ப்பாக ஏக்கிய இராச்சியம் என்பதில் நாங்கள் இணங்கியிருக்கிறோம். 

அது எதற்கான இணக்கம் என்றால் சமஷ்டி என்றால் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள கருத்து நாட்டை பிரிக்கிறார்கள் என்பது. நான் சிங்கள மக்களை சந்தித்து பேசுகிறபோது நாட்டை பிரிக்கும்படி நாங்கள் கேட்கவில்லை. 

ஆனால் பூரணமானதும், மீள பெறமுடியாததுமான அதிகாரங்களை எங்களு க்கு தாருங்கள் என கேட்கிறேன். இதனாலேயே நாங்கள் ஏக்கிய இராச்சிய என்பதற்கு இணங்கினோம். அதிகார பகிர்வு தவிர்ந்த மற்றய விடயங்களில் நாங்கள் இணக்கப்பாட்டை தெரிவித்திருக்கின்றோம். 

ஆனால் அதிகார பகிர்வு விடயத்தில் நாங்கள் தொடர்ந்தும் இறுக்கமான நிலை ப்பாட்டை கடைப்பிடிப்போம். காரணம் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலா ஷைகள் விடயத்தில் விட்டுக் கொடுப்புக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு தயா ராக இல்லை. 

அரசாங்கத்தின் செயற்பாடுகளிலும், இடைக்கால அறிக்கையிலும் எங்களு க்கும் பூரணமான திருப்தியில்லை. ஆனால் வந்திருப்பது ஒரு இடைக்கால அறிக்கை. அந்த இடைக்கால அறிக்கையிலேவே இந்தளவு விடயங்களை சாதி க்க முடிந்தமையில் எமக்கு பூரணமான திருப்தி எனத் தெரிவித்துள்ளார்.