பயங்கரவாத தடைச்சட்டமானது சக சமூகத்தினரையும் பாதிக்கும் !
இலங்கையில் புதிய அரசியல் நாகரிகத்தினை ஏற்படுத்தும் வகையிலும் சமூக பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும் சிறந்த சட்ட கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்திய இலங்கை மனித உரிமைகள் ஆணை க்குழு பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ச்சியாக காணப்படுவதானது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பாதிப்பினை ஏற்படுத்துவதாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேநேரம் மனித உரிமைகள் மீற ல்கள் தொடர்பாக 5614 முறைப்பாடு கள் கடந்த ஆண்டு கிடைக்கப்பெற்று ள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது அவற்றுள் 1174முறைப்பாடுகள் பொலிஸாருக்கு எதிரானவையாக காணப்படுவதோடு சட்டவிரோதமான கைதுகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் அதிகளவு முறைப்பாடுகள் உள்ளதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை மனித உரிமை கள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகமவின் ஊடகவியலா ளர் சந்திப்பு நேற்று வியாழக்கிழமை பொரளையில் உள்ள ஆணைக்குழுவின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
எமக்கு கடந்த ஆண்டு மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக 5614முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றுள் 1174 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு எதிரானவையாக காணப்படுகின்றன.
அவற்றில் சட்டவிரோதமான கைதுகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் அதிகளவு முறைப்பாடுகள் உள்ளன.
நிர்வாக பொறுப்புக்களை மீறுதல் தொட ர்பில் 770 முறைப்பாடுகளும் அரச உத்தியோகத்தர்களுக்கு எதிரான அநீதிகள் 1002முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
மேலும் கடந்த ஆண்டில் 396முறைப்பாடுகள் மீளப்பெறப்பட்டுள்ளன 83முறை ப்பாடுகளுக்கு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன 145 முறைப்பாடுகள் தொட ர்பில் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சட்டவிரோத கைதுகள் மற்றும் சித்திரவதைகளுக்கு எதிராக கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சித்திரவதைகளைத் தடுப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மாணவர்கள் எதிராக முன்னெடுத்த உரிமைமீறல்கள் தொடர்பாகவும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
எவ்வாறாயினும் போதிய வளங்கள் காணப்படாமையினால் முறைப்பாடுகளை முன்னெடுப்பதில் தாம தம் ஏற்படுகின்றன.
அதேபோன்று கடற்படைத் தளபதி ஊடகவியலாளர் ஒருவரை தாக்கிய சம்பவம் குறித்த முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு காணப்படுகின்றது. அதன் காரணமாக அச்சம்பவம் குறித்த விசாரணையை நாம் மேற்கொள்ளவில்லை.
கொட்டதெனியாவ பகுதியில் சித்திரவதைக் கூடமொன்று காணப்படுவதாக சத்தியக்கடதாசியுடனான முறைப்பாடொன்று எமக்கு கிடைக்கப்பெற்றது. அதுகுறித்தும் எமது அவதானத்தினைச் செலுத்தியுள்ளோம்.
அதேநேரம் தற்போதும் இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டமானது அமுலில் நீடிக்கின்றமையானது பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கான சூழ்நிலையை ஏற்படுத்துவதாகவே உள்ளது.
அத்துடன் அச்சட்டமானது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் அமைந்திருக்கின்ற இந்த பயங்கரவாத தடைச்சட்டம் மனித உரிமைகளை நிலைநிறுத்துகின்ற பாதுகாப்பு சட்டமாக மாற்றியமைக்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே நாம் உள்ளோம்.
நாம் பயங்கரவாத தடைச்சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டுமென இல ங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும் வகையில் அறிக்கையொன்றை உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தியிரு ந்தோம். எனினும் பல மாதங்கள் கடந்துள்ள போதும் பயங்கரவாத தடைச்சட்டம் மாற்றியமைக்கப்படவில்லை.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை உட்பட பல தூதுக்குழுக்களும் மனித உரிமைச் செயற்பாட்டு நிறுவனங்களும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்ட வேண்டும் என்று வலியுறுத்தியே வந்துள்ளன.
கடந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில் நாம் ஆணைக்குழுவின் கொள்கைகளுடன் தொடர்புடைய பல பரிந்துரைகளை வழங்கியிருக்கின்றோம். முன்னதாக நாம் சமர்ப்பித்த பரிந்துரைகள் பயங்கரவாத தடைச்சட்டம் பற்றியதாகும். நாம் பயங்கரவாத தடைச்சட்டம் பற்றி முன்னர் தெரிவித்த கருத்துக்களையே தற்போதும் மீண்டும் வலியுறுத்தி நிற்கின்றோம்.
ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளுதல், நீண்டகாலமாக ஒருவரை தடு ப்பில் வைத்திருத்தல் போன்ற மனித உரிமைகளை மீறுகின்ற வகையிலான ஏற்பாடுகளை தற்போதுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டிருக்கி ன்றது.
பயங்கரவாதச் சட்டம் அமுலில் இருப்பதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு மேம்ப டும் என்ற விடயத்துடன் நாம் இணங்கவில்லை. அந்த அடிப்படையிலேயே அந்தச் சட்டத்தினை நீக்கி மனித உரிமைகளுடன் இணங்கிச் செல்கின்றதான பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பதற்கான சமிக்ஞை யையும் நாம் வெளிப்படுத்தியிருக்கின்றோம் அதற்காக நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.