மைத்திரியால் வாக்காளர்களுக்கு அச்சுறுத்தலாம் – ஜி.எல்.பீரிஸ்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்காளர்களை அச்சுறுத்துவதாக பொது ஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தி யுள்ளார்.
“சிறிலங்கா பொதுஜன முன்னணி வெற்றி பெறும் உள்ளூராட்சி சபைக ளுக்கு நிதி ஒதுக்கப்படமாட்டாது என ஜனாதிபதி கூறியதன் மூலம் அவர் தேர்தல் சட்டங்களை மீறியுள்ளார்.
அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவும கூட, பொதுஜன முன்னணி வெற்றி பெறும் உள்ளூராட்சி சபைகளுக்கு பிர தமரின் ஊடாக நிதி ஒதுக்கப்படாது என தெரிவித்துள்ளார். இது சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வாக்காளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையாகும். அந்த வாக்குகளை ஐதேகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் பெற முனைகி ன்றன.
உள்ளூராட்சி சபைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி மக்களுக்குச் சொந்த மானது.
ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் எதுவானாலும், உள்ளூராட்சி சபைகளுக்கு அவற்றை பங்கிட வேண்டும். அந்த நிதி ஒன்றும் ஜனாதிபதியினுடையதோ, பிரதமரினதோ தனிப்பட்ட சொத்து அல்ல.
நிதி ஒதுக்கீட்டை வெட்டுவோம் என்று எச்சரிப்பது, தேர்தல் சட்ட மீறல். அத்து டன் மக்களின் அடிப்படை உரிமையையும் மீறும் செயல்.” எனத் தெரிவி த்துள்ளார்.