அரசாங்கம் நீடிக்குமா.? இல்லையா.?
தேசிய அரசாங்கத்தை நிறுவும் நோக்குடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீல ங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் நீடிக்கப்படுமா? இல்லையா?
என்பது தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியும் மக்கள் விடுதலை முன்னணி யும் ஆளும் கட்சியிடம் கேள்வி எழுப்பியமையினால் நேற்று சபையில் ஆளும், எதிர்க்கட்சியினருக்கு இடை யில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
ஷிரானி விஜேவிக்கிர, பியசேன கமகே ஆகியோருக்கு இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டமை தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை எண்ணிக்கையின் நிர்ணயித்திற்கும் அரசியலமைப்பிற்கும் முரணானது என்று கூட்டு எதிர்க்கட்சியினர் வாதிட்டனர்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நிலையியற் கட்டளை 23 இன் 2 கீழ் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் தினேஷ் குணவர்தன எம்.பி கேள்வி எழுப்பியதை அடுத்தே சபையில் சர்ச்சையான நிலைமை ஏற்பட்டது.
இதன்போது தினேஷ் குணவர்தன எம்.பி கேள்வி எழுப்பும் போது,
நாட்டின் அரசியலமைப்பு தொடர்பான முக்கியமான விடயமொன்றை சபை க்கு முன்வைக்க விரும்புகின்றேன்.
2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தலின் பின்னர் இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கமொன்றை நிறுவ போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யோசனையொன்றை முன்வைத்தார்.
இதன்போது அமைச்சரவையின் அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் எண்ணிக்கையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி அரசியலமைப்பின் 46 ஆவது ஷரத்தின் பிரகாரம் தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை எண்ணிக்கை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிணங்க தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்க முடியுமான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா?
தற்போது இந்த விதிமுறை மீறப்பட்டுள்ளது என்பதனை ஏற்பீர்களா? ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி நிறைவு பெற்றுள்ளமை அரசாங்கம் ஏற்குமா?
அத்துடன் ஷிரானி விஜேவிக்கிரம மற்றும் பியசேன கமகே ஆகியோருக்கு இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளமையினால் அரசியலமை ப்பின் 46 ஆவது ஷரத்து மீறப்பட்டுள்ளது.
இதனை ஏற்பீர்களா என்று கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து எழுந்து பேசிய சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல, ஷிரானி விஜேவிக்கிரம இராஜாங்க அமைச்சினை பெற்றுக்கொண்டமையா உங்களது பிரச்சினை. ஷிரானி விஜேவிக்கிரம மீண்டும் உங்களுக்குத் தேவையா? என கிண்டலாக பதிலளித்தார்.
இதன்போது தினேஷ் குணவர்தன எம்.பி கூறுகையில்,
ஷிரானி எனக்கு தேவையில்லை. ஐக்கிய தேசியக்கட்சி ஷிரானியை வைத்துக்கொள்ளட்டும். தற்போது தேசிய அரசாங்கத்தின் இரு பிரதான கட்சிகளின் ஒப்பந்தம் நிறைவுபெற்றுள்ளது. அரசியலமைப்பிற்கு முரணாக அமைச்சரவை இயங்கி வருகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தில் பதில் வழங்க வேண்டும் என்றார்.
இதனையடுத்து பேசிய அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல,ஷிரானி எனக்கு தேவையில்லை. ஐக்கிய தேசியக்கட்சி ஷிரானியை வைத்துக்கொள்ளட்டும். தற்போது தேசிய அரசாங்கத்தின் இரு பிரதான கட்சிகளின் ஒப்பந்தம் நிறைவுபெற்றுள்ளது. அரசியலமைப்பிற்கு முரணாக அமைச்சரவை இயங்கி வருகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தில் பதில் வழங்க வேண்டும் என்றார்.
இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் பதில் வழங்குவார். எனினும் தேசிய அரசாங்கத்தின் நிலவரம் தொடர்பாக எதிரணி கவலை கொள்ள தேவையில்லை. இது ஆளும் கட்சி பிரச்சினை. இதில் எதிரணி தலையிட வேண்டியதில்லை. தேசிய அரசாங்கமா உங்களுக்குள்ள பிரச்சினை? என்றார்.
இதன்போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க கூறுகையில்,
தேசிய அரசாங்கம் நிறுவுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யோசனை முன்வைத்தமையின் பிரகாரம் தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்கள் 48 உம், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் 45 ஆக இருக்க வேண்டும் என்பதே நிர்ணயிக்கப்பட்ட தீர்மானமாகும்.
அத்துடன் தேசிய அரசாங்கம் இரண்டு வருடத்தில் நிறைவு பெறும் என்றே ஆரம்பித்தல் கூறினர்.
எனினும் பிரதான கட்சிகளுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் செப்டம்பர் மாதமே நிறைவு பெற்று விட்டது. இந்நிலையில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதா? என்று கூறிய போது இடையில் குறுக்கிட்டு பேசிய அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல,இது தேசிய அரசாங்கத்தின் பிரச்சினையாகும். எதிரணி தலையிட வேண்டியதில்லை என்றார்.
இதன்போது அநுர குமார திஸாநாயக்க எம்.பி கூறும் போது,
இது தேசிய அரசாங்கத்தின் பிரச்சினை மாத்திரமல்ல. இது நாட்டு மக்களின் பிரச்சினையாகும். இரண்டு வருடங்கள் என்று கூறிவிட்டு தற்போது அதனை தாண்டி தேசிய அரசாங்கம் பயணித்த வண்ணமுள்ளது.
இரு பிரதான கட்சிகளுக்கிடையிலான ஒப்பந்தம் நீடிக்கப்படுமா? இல்லையா? புதிய ஒப்பந்தங்கள் ஏதும் கைச்சாத்திட்டிருந்தால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படியாயின் சபாநாயகரே உங்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏதும் கிடைத்துள்ளதா? என்றார். இதன்போது தனக்கு புதிய ஒப்பந்த தொடர்பான எந்தவொரு நகலும் அதற்கான தகவல்களும் கிடைக்கவில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய கூறினார்.
தேசிய அரசாங்கத்தின் ஒப்பந்தம் நிறைவு பெற்றுள்ள நிலையில் இந்த அரசா ங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் சொகுசு வாழ்க்கைக்கு நிதி ஒது க்கீடு செய்ய முடியுமா? என்றார்.
இதனையடுத்து சபாநாயகர் கரு ஜயசூரிய குறுக்கிட்டு இந்த கேள்விக்கான பதிலை பிரதமர் வழங்குவார் என்று கூறி வாக்குவாதத்தை நிறைவுக்கு கொண்டு வந்தார்.