பிரதமர் ரணிலிடம் பகிரங்கமாக கோரிக்கை விடுத்தார் - ஜனாதிபதி.!
மத்திய வங்கி ஊழல் மற்றும் ஏனைய ஊழல்வாதிகளுக்கு எதிராக சட்ட ரீதி யில் தண்டனை பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டில் பிரதமர் எனக்கு ஒத்து ழைப்பு வழங்கவேண்டும். மாறாக பிரதமர் மற்றும் ஆளும் எதிர்க்கட்சியி னர் என்னை பலவீனப்படுத்தி ஊழ ல்வாதிகளை காப்பாற்ற முயற்சிக்கக்கூடாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று கண்டியில் இடம்பெற்றது, இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் உரையாற்றுகையில்......
மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடையவர்கள் மற்றும் கடந்த கால ஊழல்கள் குறித்து எனக்கு கிடைத்துள்ள அறிக்கைக்கு அமைவாக அனை வருக்கும் எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தி அவர்களுக்கு தண்டனையை பெற்றுக்கொடுக்க எனக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்.
பிரதமர் மற்றும் ஆளும் எதிர்க் கட்சியினர் அனைவரும் ஒரே நோக்கத்தில் செயற்படுவீர்கள் என்றால் இந்த பயணத்தில் என்னை பலப்படுத்துங்கள். என்னை பலப்படுத்துவதை விடுத்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் என்னை பல வீனப்படுத்த வேண்டாம்.
அவ்வாறான எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் .
2014 ஆம் ஆண்டு நான் அப்போதைய அரசாங்கத்தில் இருந்து விலகிய போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் என்மீது குற்றம் சுமத்தினார்கள். இன்று ஐக்கிய தேசிய கட்சியினர் என்மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்.
நான் எந்தக் கட்சிக்கும் துரோகம் இழைக்கவில்லை. ஊழல் மோசடிகள் அனை த்தையும் ஒழிப்பதற்கு முன்வருகின்றேன். ஊழலை ஆதரிக்கும் அவ்வாறான நபர்களுக்கு மட்டுமே நான் இன்று துரோகியாக உள்ளேன்.
இன்று மத்திய வங்கி அறிக்கை தொடர்பாக மேடைகளில் கூச்சல் போடும் முன்னாள் தலைவர்கள், அன்று முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயகவிற்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்த போது பாராளுமன்றத்திற்கு வருகை தந்து வாக்களிக்கவில்லை.
ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறிய மறுகணம் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அந்த காரணிகள் அனைத்துமே எனக்கு நன்றாக தெரியும் எனத் தெரிவித்தார்.