மக்களிடம் திருடியோரை மன்னிக்க முடியாது – ஜனாதிபதி
மக்களின் பணத்தை திருடிய எவரு க்கும் மக்கள் மன்னிப்புக் கிடையா தெனவும் மன்னிப்பு வழங்க நானும் தயாரில்லை என ஜனாதிபதி மைத்தி ரிபால சிறிசேன தெரிவித்தார்.
நேற்றைய தினம் மட்டக்களப்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து உரையாற்றிய ஜனாதிபதி இத னைத் தெரிவித்ததுடன் தொடர்ந்து கருத்து வழங்கிய ஜனாதிபதி ;
இனம், சமயம், நிறம் என்ற பேதமி ன்றி இந்த நாட்டின் அனைத்து மக்க ளும் இணைந்து தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்தது ஜனநாயக சமூகமொ ன்றையும் தூய அரசியல் இயக்க மொன்றையும் எதிர்பார்த்தேயாகும் எனவே நான் எப்போதும் மக்களுடன் செயற்பட்டுச் சவாலை வெற்றிகொள்வேன் என த்தெரிவித்துள்ளார்.
இனம், சமயம் என்ற பேதங்களின்றி நாட்டின் அனைத்து இனங்களினதும் உரி மைகளுக்காகவும் தான் முன்னிற்பதாகவும் அபிவிருத்தியில் பின்தங்கிய மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தியை துரிதப்படுத்தி மக்கள் பிரச்சி னைகளை தீர்ப்பதற்காக தன்னுடன் செயற்படும் புதிய அமைப்பொன்றை மாவட்டத்தில் ஸ்தாபிப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த நிக ழ்ச்சித்திட்ட த்தை வெற்றி பெறச்செய்வதற்கு இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிபெறச் செய்யவேண்டுமெனத் தெரி வித்துள்ளார்.
நாட்டை முன்கொண்டுசெல்வதற்கும் தூய அரசியல் இயக்கத்திற்காகவும் இனம், சமயம் என்ற பேதங்களின்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கைகோ ர்த்துக்கொள்ளுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, நாட்டு மக்க ளின் பணத்தை திருடிய எவருக்கும் மக்கள் மன்னிப்பு வழங்கக் கூடாது என்றும் அத்தகையவர்களுக்கு மன்னிப்பு வழங்க தானும் தயாரில்லை என்றார்.
விளையாட்டரங்கில் நிரம்பியிருந்த மக்கள் இதன்போது ஜனாதிபதிக்கு பெரும் ஆரவாரத்துடன் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்ட க்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஜீ.ஹரிதரன் கிரியினால் ஏற்பாடு செய்யப்ப ட்டிருந்த இந்த மக்கள் சந்திப்பில் ஸ்ரீலங்கா மக்கள் தேசியக் கட்சியின் தலைமை செயலாளர் விஷ்னு காந்தன், மட்டக்களப்பு பட்டிருப்பு, கல்குடா ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்தி ரக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் பொருளாளர் ஏரா வூர்பற்று பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் தம்பிநாயகம் கலேந்தி ரன் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணை ந்துள்ளார்.