விடுதலைப்புலிகளின் பெயரில் வாக்கு சேகரிப்பில் கூட்டமைப்பாம் - மாவை
தேர்தல் காலங்களில் மட்டும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தியாகங்களை யும் அருமை பெருமைகளையும் தெரிவித்து வருகின்ற தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பு இம்முறையும் விடுதலைப்புலிகள் தொடர்பான விளக்கவுரையைத் தெரிவித்து வாக்கு சேகரிக்கும் நடவடிக்கையை முன்னெடுக்க ஆரம்பித்து ள்ளது.
மேலும் தெரியவருவதாவது,
தமிழ ர்களின் ஜனநாயக போராட்ட வரலா ற்றில் மிக உச்சமான பலமாக இரு ந்தது தமிழீழ விடுதலைப்புலிகளின் காலம். அப் பலத்தின் ஒரு பகுதி யினை தற்போது நாம் இழந்து நிற்கி ன்றோமென தமிழ ரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரி வித்துள்ளார். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பா ளர்களை தேர்தல் தொடர்பாக தெளிவூட்டும் கலந்துரையாடல் நிகழ்வானது நேற்று காலை நற்பிட்டிமுனை சுமங்கலி திருமண மண்டபத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் இவ்வாறு தெரி வித்துள்ளார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்……
இன்றைய காலகட்டத்தில் மூன்று கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு பலமான ஜன நாயகக்கட்சியாக மக்கள் முன் தேர்தலில் குதித்திருக்கின்றது.
இதனை அனை த்து தமிழ் மக்களும் உணர்ந்து செயற்படவேண்டும்.
த.தே.கூட்டமைப்பானது ஜனநாயக மக்கள் கட்சியை ஜனநாயக நீரோட்டத்தில் இணைத்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்தக்க ட்சி தற்போது எமது கட்சியுடன் இணைந்து உள்ளுராட்சி தேர்தல் களத்தில் இற ங்கியுள்ளது.
இன்றைய காலத்திற்கு ஏற்றாற்போல் எதிர்கால சந்ததியினராகிய இளைஞ ர்களை அரசியல் களத்தில் இறக்க வேண்டிய தேவையும் உள்ளது. அதனை கருத்தில் கொண்டு எமது கூட்டமைப்பானது இம்முறை முன்னாள் போராளி களையும் தேர்தல் களத்தில் களமிறக்கியுள்ளார்கள்.
எது எவ்வாறு இருந்தபோதும் த.தே.கூட்டமைப்பிற்கு எதிராக பல விதமான விமர்சனங்களை மாற்றுக்கட்சியினர் சுமத்துவதனை ஊடகங்கள் வாயிலாக தெரிவாகின்றது. த.தே.கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடு தொடர்பாக எமது மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவரிடமும் உள்ளது.
எமது மக்கள் ஆயுத போராட்டம் நடைபெற்ற காலத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதுடன் அவர்களது உடமைகளும் அழிந்து நாசமாகின அவை அனைத்தையும் மக்கள் இழந்தபோதும் அவர்களது உரி மையை தங்களிடம் உள்ள வாக்குப்பலம் மூலம் நிருபித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதேபோல கூட்டமைப்பின் வாக்கு வேட்டைக்காக தமிழீழ விடுதலைப்புலிக ளின் தியாகங்களையும் ஈகங்களையும் கட்சியினர் பரவலாக பயன்படுத்த ஆர ம்பித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.