கூட்டமைப்பு சோரம் போகவில்லை என - செல்வம் அடைக்கலநாதன்!
ஐக்கிய தேசியக் கட்சியிடமோ, ஜனாதிபதியிடமோ தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு சோரம் போகவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார அலுவ லகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே தொடர்ந்து கருத்து தெரிவித்ததுடன்,
”கிராமிய மற்றும் நகர அபிவிருத்திக்கான தேர்தல் என்பதைக் கடந்து சில அர சியல் ரீதியான முரண்பாடான கரு த்துக்களை இந்த தேர்தலில் பலர் முன்வைத்து வருவதைக் காணக் கூடியதாக உள்ளது. அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு விடயங்க ளில் அரசுக்கு ஆதரவாக செயற்படுவதான குற்றச்சாட்டை இன்று பலர் முன்வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
கூட்டமைப்பையும், அவர்களது வடக்கு – கிழக்கு பிரதேசத்தையும் சிதைப்ப தற்கான வேலைகள் தென்னிலங்கையில் நடைபெறுகின்றது. ஆயுத பலம் மௌனிக்கப்பட்ட பின்னர் அந்தப் பொறுப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருக்கிறது.
புதிய அரசியலமைப்பு மாற்றம் பெறுகின்ற சந்தர்ப்பத்தை நாங்கள் ஒரு கருவி யாக பயன்படுத்த வேண்டுமெனத் தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகத்திடம் நியாயம் கேட்கும் வகையில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காய்களை நகர்த்துகின்றது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியிடமோ, ஜனாதிபதியிடமோ சோரம் போகவில்லை போராட்டத்திலும் சரி, அரசியலிலும் சரி சில இராஜதந்திரங்க ளுடன், உருவாக்கப்பட்ட மற்றும் செயற்பட்ட வரலாறுகளை நாம் பார்க்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரி வித்துள்ளார்.