Breaking News

சுவிட்சர்லாந்தில் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் மீதான குற்றச்சாட்டு விசாரணைகள் !

சுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைகள் இன்றும் தொடர்கி ன்றன. தமிழ்த் தேசிய செயற்பாட்டா ளர்கள் உட்பட்ட 13 தமிழர்களும் சமூ கமளித்தனர். தமிழீழ விடுதலைப் புலி கள் அமைப்புக்காக சுவிட்சர்லாந்தில் செயற்பட்ட WTCC உலகத் தமிழர் ஒரு ங்கிணைப்புக் குழு மீதான விசார ணைகள் கடந்த 08.01.2018 சுவிட்சர்லா ந்து Belin zona வில் அமைந்துள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் ஆரம்பமாகி 15.01.2018 திங்கள் நேற்றைய தினமும் நடைபெற்ற  குற்றஞ்சாட்டப்பட்ட அனை வரும் தத்தமது வழக்குரைஞர்களுடன் சமூகமளித்திருந்தனர். 
நீதிபதிகளால் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் சுய விபரங்கள் பற்றிய முழுமையான விசாரணைகள் ஆரம்பமாகின. இதன் போது அவர்கள் தமிழர்களின் போராட்ட கால வரலாற்றை குறிப்பிட்டு தாயக த்தில் தாம் வாழ்ந்த காலம் தொடக்கம் சுவிட்சர்லா ந்தில் அவர்களின் வாழ்க்கை வரை மிகவும் உணர்வுபூர்வமான முறையில் தமது சுயவிபரங்களை தெரிவித்தனர்.

இவ் விசாரணைகள் தொடர்ந்து இன்றும் 16.01.2018 செவ்வாய் மதியம் வரை நடைபெறும். தொடர்ந்து நாளை பிற்பகல் 14.00 முதல் இவர்கள் மீது சுமத்த ப்பட்ட குற்றங்கள் சார்ந்த விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளன.