பிணைமுறி அறிக்கை மத்திய வங்கி ஆளுநருக்கு அனுப்பி வைப்பு !
மத்திய வங்கியின் பிணை மறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை செயற்படுத்துவதற்காக மத்திய வங்கியின் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளரினால் நேற்றைய தினம் இவ்வறிக்கை அனு ப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி யின் ஆலோசனையின் பின் மத்திய வங்கியின் நிதிச்சபை 10 பக்கங்களை க்கொண்ட அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளது. முறிகள் கொடுக்கல் வாங்கல் மோசடி போன்ற முறைகே டுகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பில் நிதிச்சபை அதில் தெளிவுபடு த்தியுள்ளது.
இந்நிலையிலேயே பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இலங்கை மத்திய வங்கி ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அத னடிப்படையில் முதலீட்டுத் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது நம்பகத்த ன்மை மற்றும் நிர்வாகம் என்பனவற்றை தொடர்ந்தும் மேம்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.