தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயருக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தடை !
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக உருவான ஆனந்த சங்கரி தலைமை யிலான தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்புக்கு தேர்தல்கள் ஆணை க்குழு தடை விதித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக் குழுவினரு க்கும், கட்சிகளின் செயலாளர்களு க்கும் இடையே நேற்றைய தினம் சந்திப்பில் இதில், “தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு” என்ற பெயர், தமது கட்சியின் பெயரை ஒத்த தாக உள்ளது. ஆகவே இப் பெயரை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதை ஆராய்ந்த தேர்தல்கள் ஆணைக்குழு, இவர்கள், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் “தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு” என்ற தமது கட்சியின் பெயரை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தில், ஆனந்த சங்கரி தலைமையில், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் ஒன்றிணைந்து “தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு” என்ற பெயரில் உள்ளூராட்சி மன்ற த் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.